4ம் கட்ட மக்களவை தேர்தல்!! மொத்தம் 62.9% வாக்குகள் பதிவு!! மேற்குவங்கம் தான் டாப்!!
மக்களவை தேர்தலில் 4 ஆம் கட்டமாக 9 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் 62.9 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 75.66 சதவீத வாக்குகள் பதிவானது.
மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கெனவே 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில், 4ஆம்கட்ட தேர்தலும் நடந்து முடிந்துள்ளது.ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகள், தெலங்கானாவில் 17 தொகுதிகள், உத்தர பிரதேசத்தில் 13 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 11 தொகுதிகள், மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 8 தொகுதிகளில், பீகாரில் 5 தொகுதிகள், ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவில் தலா 4 தொகுதிகளில், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இதில், மொத்தம் 1,717 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் அகிலேஷ் யாதவ் (உத்தரப் பிரதேசம்), மஹுவா மொய்த்ரா (மேற்கு வங்கம்) கிரிராஜ் சிங் (பீகார்) ஒய்.எஸ்.சர்மிளா (ஆந்திரப் பிரதேசம்), சத்ருகன் சின்ஹா (மேற்கு வங்காளம்), ஓவைசி(தெலுங்கானா) என பல நட்சத்திர வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்த தேர்தலில் 62.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 75.66 சதவீத வாக்குகள் பதிவானது. குறைந்தபட்சமாக ஜம்மு காஷ்மீரில் 35.75 சதவீத வாக்குகள் பதிவானது. 5 மணி நிலவரப்படி, ஆந்திர பிரதேஷ் - 68.04 % பீகார் - 54.14 % ஜம்மு காஷ்மீர்- 35.75% ஜார்க்கண்ட் - 63.14% மத்தியபிரதேசம் - 68.01% மகாராஷ்டிரா - 52.49% ஒடிசா - 62.96% தெலுங்கானா - 61.16% உத்தர பிரதேசம் - 56.35% மேற்கு வங்கம்- 75.66% வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் 4 ஆம் கட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்கு சதவிகிதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.