தற்காலிக பணியாளர்களுக்கு 3 மாத ஊதியக் கொடுப்பாணை...! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு...!
478 தற்காலிகப் பணியிடங்களுக்கு 31.12.2024 வரை 3 மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி துறை வெளியிட்ட சுற்றறிக்கையில்; பள்ளிக் கல்வி இயக்ககம் மற்றும் சார்நிலை அலுவலகங்களுக்கு தற்காலிகமாக ஒப்பளிக்கபட்ட 478 ஆசிரியரல்லாதோர் மற்றும் அலுவலர்கள் பணியிடங்கள் 01.01.2018 முதல் 31.12.2020 வரை தொடர் நீட்டிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. பின்னர் பள்ளிக் கல்வி இயக்ககம் மற்றும் சார்நிலை அலுவலகங்களுக்கு தற்காலிகமாக ஒப்பளிக்கப்ட்ட 478 ஆசிரியரல்லாதோர் மற்றும் அலுவலர்கள் பணியிடங்கள் 01.01.2021 முதல் 31.12.2023 வரை தொடர் நீட்டிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
மேற்காணும் பணியிடங்களுக்கு 01.01.2024 முதல் 31.03.2024 வரை மூன்று மாதங்களுக்கு விரைவு ஊதியக் கொடுப்பாணை (Express Pay Order) வழங்கப்பட்டுள்ளது. 01.04.2024 முதல் 30.09.2024 வரை ஆறு மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி இயக்குநர் தற்போது, மேற்கண்ட 478 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத தற்காலிக பணியிடங்களுக்கு 01.04.2024 முதல் 30.09.2024 வரை ஆறு மாதங்களுக்கு தற்காலிக தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அரசாணை பெற காலதாமதம் ஆகும் என்பதால் 01.10.2024 முதல் 31.03.2025 ஆறு மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை (Pay Authorization) வழங்குமாறு அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேற்காணும் சூழ்நிலையில், பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை ஏற்று மேற்குறிப்பிட்ட 478 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத தற்காலிக பணியிடங்களுக்கு 01.10.2024 முதல் மூன்று மாதங்களுக்கு ஊதியம் பெற்று வழங்க ஏதுவாக வாதிய கொடுப்பாணை (Pay Authorization) வழங்கப்படுகிறது. மேற்படி அலுவலர்களுக்கான 01.10.2024 முதல் 31.12.2024 வரை மூன்று மாதங்களுக்கு சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான ஊதியப் பட்டியல்கள் உரிய அலுவலர்களால் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், அவை ஏனைய இனங்களில் சரியாக இருக்கும் நிலையில், ஏற்றுக் கொண்டு ஊதியம் பெற அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..