4500% லாபம்! இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படம் இதுதான்! ஆனா கல்கி 2898 ஏடி இல்ல..
2024-ம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு சுமாரான ஆண்டு என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக முதல் 6 மாதங்களில் வெளியான எந்த படமும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டாகவில்லை. எனினும் அரண்மனை 4, தங்கலான், மகாராஜா போன்ற படங்கள் 100 வசூலை தாண்டியது. டிமாண்டி காலனி, கருடன் போன்ற படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே மிகுந்த எதிர்பார்ப்புடன், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இந்தியன் 2 படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. கடந்த ஜூலை மாதம் தனுஷ் இயக்கி நடித்திருந்த ராயன் படம் நல்ல வரவேற்பை பெற்று ரூ.160 கோடி வசூல் செய்தது. தொடர்ந்து மகாராஜா, தங்கலான் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
மறுபுறம் தெலுங்கில் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், கமல்ஹாசன் முக்கிய வேடங்களில் நடித்திருந்த கல்கி 2898 ஏடி படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இந்த ஆண்டில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்த படம் இதுதான்.
அதே போல் பாலிவுட்டில் சமீபத்தில் வெளியான ஸ்தீரி 2 படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்தது. இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த ஹிந்திப் படமாக மாறியுள்ளது. ஆனால் கல்கி 2898 AD படத்தின் வசூலை இந்த படம் மிஞ்ச முடியவில்லை. ஆனால் இந்த வருடத்தில் இந்திய சினிமாவில் அதிக லாபம் ஈட்டிய படம் கல்கி 2898 ஏடி அல்லது ஸ்த்ரீ 2 படமோ இல்லை.
ஆம். 3 கோடி பட்ஜெட்டில் மலையாளத்தில் உருவான மலையாள படம் தான் இந்த ஆண்டின் அதிக லாபம் ஈட்டிய படமாகும். மலையாள திரையுலகிற்கு இந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றி ஆண்டாகும். மஞ்சுமெல் பாய்ஸ், ஆவேஷம் என போன்ற படங்கள் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி படங்களாக மாறின. இந்தப் படங்களில், வெறும் ரூ. 3 கோடி பட்ஜெட்டில் உருவான பிரேமலு படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. புதுமுகங்கள் நடிப்பில் வெளியான இந்த படம் 4500% லாபத்தை ஈட்டியது. இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.136 கோடி ஆகும்.
கிரிஷ் ஏ.டி இயக்கிய பிரேமலு படத்தில் நஸ்லென் கே. கஃபூர் மற்றும் மமிதா பைஜு ஆகியோர் நடித்துள்ளனர், மேலும் சங்கீத் பிரதாப், ஷியாம் மோகன், மீனாட்சி ரவீந்திரன், அகிலா பார்கவன், மேத்யூ தாமஸ் மற்றும் அல்தாஃப் சலீம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிப்ரவரியில் வெளியான பிரேமலு பின்னர் ஓடிடி தளத்திலும் வெளியானது.
இதனிடையே தெலுங்கில் 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ஹனுமான் படம் 350 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்து. 600 கோடி பட்ஜெட்டில் உருவான கல்கி 2898 AD படம், 100%க்கும் குறைவான லாபத்தைப் பெற்றது. மறுபுறம், ரூ.60 கோடியில் உருவான ஸ்தீரி 2 படம் சுமார் 850% அதிக லாபம் ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயம்ரவி எடுத்தது சரியான முடிவு.. ஆர்த்தி அந்த அளவுக்கு டார்ச்சர் பண்ணுவாங்க..!! – பிரபலம் பகீர்