முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

44% மக்கள் திமுக ஆட்சி மீது அதிருப்தி..!! அதிமுகவை பின்னுக்கு தள்ளிய பாஜக..!! கருத்துக் கணிப்பு முடிவால் எடப்பாடி அதிர்ச்சி..!!

01:14 PM Feb 08, 2024 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ்நாட்டில் சுமார் 44% மக்கள் திமுக ஆட்சி மீது அதிருப்தியில் உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்காக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஒவ்வொரு கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், டைம்ஸ் நவ் மற்றும் மேட்ரிஸ் செய்தி நிறுவனங்கள் இணைந்து தேர்தல் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் அடங்கிய தென் இந்தியாவில் பாஜக 27 இடங்களை கைப்பற்றும் என்றும், அதில் 21 இடங்கள் கர்நாடகாவில் இருந்து மட்டும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த லோக்சபா தேர்தலில் அங்கு 28ல் 25 இடங்களை பாஜக கைப்பற்றியிருந்தது. கர்நாடகாவில் 46.2% ஓட்டுகளை பாஜகவும், 42.3% ஓட்டுகளை காங்கிரசும், 8.4% ஓட்டுகளை குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளமும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 39 தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சிகள் 36 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் திமுக கூட்டணி 59.7% ஓட்டுகளுடன் முதலிடத்தையும், பாஜக கூட்டணி 20.4 சதவீத ஓட்டுகளுடன் 2-வது இடத்தையும், அதிமுக கூட்டணி 16.3% ஓட்டுகளுடன் 3-வது இடத்தையும் பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்த அதிமுக, லோக்சபா தேர்தலில் பாஜவுக்கு அடுத்த இடத்தையே பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், அதிமுக தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் சுமார் 44% பேர் முதல்வர் முக.ஸ்டாலினின் ஆட்சி மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' யாத்திரை பாஜகவுக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என 32% பேர் தெரிவித்துள்ளனர். தெலுங்கானாவில் சமீபத்தில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ், லோக்சபா தேர்தலில் 17ல் 9 இடங்களை மட்டுமே கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது. பாஜக 5 இடங்களிலும், பாரத் ராஷ்ட்ரீய சமிதி கட்சி 2 இடங்களிலும், ஓவைசி கட்சி ஒரு இடத்திலும் வெல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா மற்றும் கேரளாவில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 19 இடங்களிலும், தெலுங்கு தேசம் - ஜனசேனா கூட்டணி 6 இடங்களிலும் வெல்லும். கேரளாவில், இண்டியா கூட்டணி 74.9 சதவீத ஓட்டுகளையும், பாஜக கூட்டணி 19.8 சதவீத ஓட்டுகளையும் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
அதிமுகஎடப்பாடி பழனிசாமிகருத்துக் கணிப்புடைம்ஸ் நவ்தமிழ்நாடுதிமுக ஆட்சிபாஜக
Advertisement
Next Article