41,000 ஆண்டுகள் பழமையான வைரஸ்கள்!. கடலுக்கடியில் இருந்து வெளியேறுவதால் ஆபத்து..! ஆய்வாளர்கள் முக்கிய தகவல்!
Virus: கொரோனா நமது ஒட்டுமொத்த உலகையும் எப்படிப் புரட்டிப் போட்டது என்பது அனைவருக்கும் தெரியும். அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை அனைத்து நாடுகளும் மொத்தமாக முடங்கிப் போனது. அதில் இருந்து மீண்டு வருவதே பெரிய போராட்டமாகப் போனது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் சீனா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 60 ஆய்வாளர்கள் பகீர் கண்டுபிடிப்பு ஒன்றைச் செய்துள்ளனர். இந்த ஆய்வாளர் குழு இமயமலையில் சுமார் 41,000 ஆண்டுகள் பழமையான ஜாம்பி வைரஸை கண்டறிந்துள்ளனர்.
அதாவது வடமேற்கு திபெத்திய பீடபூமியில் உள்ள குலியா பனிப்பாறையைச் சேகரித்துள்ளனர். அந்த பனிப்பாறையை ஆய்வு செய்த போது தான் மனிதர்களுக்கு இதற்கு முன்பு தெரியாத சுமார் 1,700க்கும் மேற்பட்ட வைரஸ் மரபணுக்கள் அதில் இருப்பது தெரிய வந்தது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 6,000 மீட்டர் உயரத்தில் இந்த பனிப்பாறைகள் இருப்பதால், பல்வேறு காலகட்டங்களில் இருந்த வைரஸ்கள் இங்கே உறைந்துவிடுகின்றன. அப்படி உறைந்து போய் கிடந்த வைரஸ்களை தான் ஆய்வாளர்கள் இப்போது கண்டறிந்துள்ளனர். இது குறித்த விரிவான ஆய்வு ரிப்போர்ட் நேச்சர் ஜியோசைன்ஸ் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பனிப்பாறையில் இருந்த வைரஸ்கள் ஒன்பது வெவ்வேறு காலங்களைச் சேர்ந்தவை எனக் கூறப்படுகிறது. ஒரு ஸ்பெஷல் இயந்திரத்தைப் பயன்படுத்தி ஆய்வாளர்கள் பனிப்பாறையைத் துளையிட்டுள்ளனர். சுமார் 300 மீட்டர் துளையிட்டு அதிகாரிகள் பனியைச் சேகரித்த நிலையில், அதில் தான் இத்தனை வைரஸ்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கடலுக்கடியில் இருந்து வெளியேறிவரும் இந்த பழமையான வைரஸ்கள் குறித்து சீன ஆராய்ச்சியாளர்கள் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது, இந்த வைரஸ்களை நினைத்து பயப்பட வேண்டாம் என்கின்றனர். இவை மனிதனையோ விலங்குகளையோ தாக்கும் குணம் கொண்டவை அல்ல. இவை பாக்டீரியாக்களை மட்டுமே உண்டு வாழும் பாக்டீரியோஃபேஜ்களை ஒத்தவையாகவே உள்ளன என்று கூறுகின்றனர்.
ஆனால் இயற்கையில் எதுவும் நடக்காது என்று நாம் சொல்வதற்கு இல்லை. ரஷ்யாவின் சைபீரிய உறைப்பனி பாளங்களில் இதேபோன்று நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் வெளிப்பட்ட வைரஸ்கள் இன்றும் நோயினை உருவாக்கும் தன்மை உடையதாக உள்ளன. கிட்டத்தட்ட 48,500 ஆண்டுகளாக பூமிக்கு அடியில் தூங்கிக் கொண்டிருந்த அந்த வைரஸ்கள், இன்றைய வைரஸ்களை விட அளவில் பெரியதாகவும் உள்ளன.
Readmore: குரங்கு அம்மை வைரஸ்…! சோதனை அதிகரிக்க வேண்டும்…! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு…!