குட் நியூஸ்...! 41 அத்தியாவசிய மருந்துகளின் விலை குறைப்பு...! உடனே அமல்படுத்த உத்தரவு...!
41 அத்தியாவசிய மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் குறைத்துள்ளது.
பொதுவாகப் பயன்படுத்தப்படும் 41 அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சர்க்கரை நோய், இதய நோய், கல்லீரல் கோளாறுகள் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்டாசிட்கள், மல்டிவைட்டமின்கள் மற்றும் நோய் எதிர்ப்பு மருந்துகள் இனி மலிவான விலையில் கிடைக்கும். அத்தியாவசிய மருந்துகள் பொதுமக்களுக்கு மலிவு விலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் 143வது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
உலகளவில் அதிக எண்ணிக்கையிலான நீரிழிவு நோயாளிகளைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் உள்ளது. இந்த விலை குறைப்பால் ஏறக்குறைய 10 கோடி நீரிழிவு நோயாளிகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய விலையை உடனடியாக அனைத்து மருந்து நிறுவனங்கள் மற்றும் மருந்து கடைகளில் அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மாத தொடக்கத்தில், தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் 923 மருந்துகளின் திருத்தப்பட்ட உச்சவரம்பு விலையையும், 65 திருத்தப்பட்ட சில்லறை விலைகளையும் ஏப்ரல் 1 முதல் வெளியிட்டது. அதன் படி, Metiride, Hydoride, Hydoride, போன்ற பல மருந்துகளின் விலை குறைக்கப்பட்ட சில மருந்துகளில் அடங்கும்.