For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மகிழ்ச்சி செய்தி..! TNPSC குரூப்-4 தேர்வில் கூடுதலாக 41 காலிப்பணியிடங்கள்...! முழு விவரம்

41 additional vacancies in TNPSC Group-4 exam
06:11 AM Jan 09, 2025 IST | Vignesh
மகிழ்ச்சி செய்தி    tnpsc குரூப் 4 தேர்வில் கூடுதலாக 41 காலிப்பணியிடங்கள்      முழு விவரம்
Advertisement

குரூப்-4 தேர்வில் கூடுதலாக 41 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 பதவிகளில், கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர் , தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், தனி உதவியாளர், கிளர்க் - 3, தனிச் செயலாளர், இளநிலை நிர்வாகி, பால் பதிவாளர், ஆய்வக உதவியாளர், பில் கலெக்டர், தொழிற்சாலை மூத்த உதவியாளர், வனப் பாதுகாவலர், இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த 2023-ம் ஆண்டு வெளியிட்டது தமிழக அரசு.

Advertisement

கிராம நிர்வாக அலுவலர் 400, இளநிலை உதவியாளர் பிணையற்றது 3 ஆயிரத்து 458, இளநிலை உதவியாளர் பிணை உள்ளது 69, பில் கலெக்டர் 99, தட்டச்சர் 2 ஆயிரத்து 360, சுருக்கெழுத்தர் நிலை 3 ல் 642, இளநிலை உதவியாளர் வக்பு வாரியம் 32, சுருக்கெழுத்தர் நிலை 3, தமிழ்நாடு பால் உற்பத்தி கூட்டுறவு இணையம், கூட்டுறவு நிறுவனங்களில் 17, தடயவியல் துறையில் 32, வனத்துறையில் 216, வீட்டுவசதி வாரியம் 22 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது.

குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை அக்டோபர் 28-ம் தேதி https://tnpscresults.tn.gov.in மற்றும் tnpscexams.in ஆகிய இணையதளங்களில் வெளியிட்டது. மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீடு விதி. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அடிப்படையில், கணினி வழியிலான சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வானவர்கள் பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

சான்றிதழ்களை சமர்பித்தவர்கள் அளித்த விபரத்தின் அடிப்படையில் அவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள், தங்களின் சான்றிழ்களை பதிவேற்றம் செய்தனர். இந்த நிலையில், குரூப்-4 தேர்வுகளுக்கான கலந்தாய்வு வருகிற ஜனவரி மாதம் நடைபெறும் என்று ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இந்நிலையில் குரூப்-4 ல் கூடுதலாக 41 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.இதனுடன் மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 9,532 ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement