"அம்மா, எனக்கு இங்க வலிக்குது"; கதறிய 4 வயது சிறுமி; மகளை வீட்டில் வைத்து விட்டு, வேலைக்கு சென்ற பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!!
மும்பை, கிழக்கு புறநகர் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால், அவர்கள் வீட்டிற்க்கு திரும்பி வரும் வரை சிறுமி தனியாக இருப்பது உண்டு. அந்த வகையில், சம்பவத்தன்று சிறுமி வழக்கம் போல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், சிறுமி பெரும்பாலும் வீட்டில் தனியாக இருப்பதை 27 வயதான வாலிபர் ஒருவர் நோட்டமிட்டு வந்துள்ளார். இதையடுத்து, அந்த வாலிபர் சிறுமியை ஒன்றாக விளையாடலாம் என்று கூறி, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
தனியாக இருந்து சலித்துப் போன சிறுமியும், அந்த வாலிபருடன் அவரது வீட்டிற்க்கு சென்றுள்ளார். அப்போது அந்த வாலிபர் நான்கு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் சிறுமி, அழுதுகொண்டே தனது வீட்டிற்க்கு சென்றுள்ளார். பின், இரவு 07:30 மணியளவில் வீட்டிற்கு வந்த தனது தாயிடம், அந்தரங்க பகுதி வலிப்பதாக கூறி சிறுமி அழுதுள்ளார். இதனால் அதிர்ந்துபோன தாய் சிறுமியின் உடலை சோதித்தபோது, மகள் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அவர் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தாய் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து, சிறுமியை பலாத்காரம் செய்த 27 வயது வாலிபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த வாலிபர் சிறுமியை பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, போலீசார் வாலிபர் மீது போக்ஸோவில் வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தனர்.
Read more: ஜெட் வேகத்தில் உயரும் சின்ன வெங்காயம் விலை.. உரிக்காமலேயே கண்ணீர் வருதே..!!