4 வயது சிறுமிக்கு, சலூன் கடைக்காரா் செய்த காரியம்.. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்..
பெண், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாலியல் சீண்டல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதை பற்றி சிலர் வெளியில் சொன்னாலும், பலர் வெளியில் சொன்னால் தங்களுக்கு அசிங்கம் என்று நினைத்து வெளியில் சொல்வது இல்லை. இதை தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ளும் ஆண்கள் பலர். இதனால் நாளுக்கு நாள் குற்றங்கள் பெருகி வருகிறது. இந்நிலையில், தற்போது சிறுமி ஒருவருக்கு நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நான்குனேரி அருகே மூலைக்கரைப்பட்டி அரசனாா்குளத்தை சோ்ந்தவா் 35 வயதான கணேசன். மூலக்கரைப்பட்டியில் சலூன் கடை நடத்தி வரும் இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், அவரது கடைக்கு, 4 வயது சிறுமி ஒருவர் முடி வெட்டுவதற்காக அவரது தந்தையுடன் வந்துள்ளாா். இதையடுத்து, சிறுமிக்கு கணேசன் முடி வெட்டும் போது, சிறுமியின் தந்தை அருகேயுள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது கணேசன், சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
தனக்கு என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் பதறிப்போன சிறுமி, தனக்கு நடந்ததை எல்லாம் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கணேசனை கண்டித்துள்ளனர். மேலும், சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை நான்குனேரி மகளிா் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள கணேசனை தேடி வருகின்றனா்.