"4 வயது சிறுமியின் கை கால்களை உடைத்து..."; நெஞ்சை பதைபதைக்கும் கொடூர சம்பவம்..
ஹரியானா மாநிலம், நூஹ் மாவட்டத்தில் இருக்கும் மோரோரா கிராமத்தில், 4 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை, சிறுமி வழக்கம் போல், தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்திற்கு பின்னர், சிறுமியின் பெற்றோர் வந்து வெளியே பார்த்த போது, சிறுமி அங்கு இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் சிறுமியை தேடி உள்ளனர். ஆனால் எங்கு தேடியும் சிறுமி கிடைக்கததால் பதறிப்போன பெற்றோர், சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், இரவு சுமார் 11 மணியளவில் கை-கால்கள் உடைக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுமியின் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்யப்பட்டு கிடந்த சிறுமியின் சடலம், காணாமல் போன சிறுமி தான் என்று உறுதி செய்யப்பட்டது. மேலும், சிறுமியின் உடலில், பலாத்காரம் செய்யப்பட்ட அடையாளம் இருந்தால், அவரை பலாத்காரம் செய்து தான் கொலை செய்திருக்க வேண்டும் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read more: நீரிழிவு நோயாளிகள் எந்த அரிசி சாப்பிட்டால் நல்லது தெரியுமா??