For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

எனக்கு 4 புருஷனா..? ஏன் உங்களுக்கு தெரியாதா சீமான்..? பெண் பாவம் பொல்லாதது..!! விளாசிய விஜயலட்சுமி..!!

Actress Vijayalakshmi has strongly criticized Seeman for releasing a new video.
07:55 AM Aug 22, 2024 IST | Chella
எனக்கு 4 புருஷனா    ஏன் உங்களுக்கு தெரியாதா சீமான்    பெண் பாவம் பொல்லாதது     விளாசிய விஜயலட்சுமி
Advertisement

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர், சில திரைப்படங்களில் நடித்தும் இயக்கியும் இருக்கிறார். இவ்வாறு கடந்த 2011ஆம் ஆண்டு சீமான் இயக்கிய வாழ்த்துகள் என்ற படத்தில் விஜயலட்சுமி நடித்திருந்தார். அப்போது தங்களுக்கு காதல் ஏற்பட்டதாகவும், மாலை மாற்றி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறி பரபரப்பை கிளப்பி வந்தார். மேலும், தனக்கு திருமண ஆசை காட்டி தன்னுடன் குடித்தனம் நடத்தியதாகவும் பல குற்றச்சாட்டுகளை கூறி வந்தார்.

Advertisement

தற்போது விஜயலட்சுமி, பெங்களூருவில் வசிப்பதாக கூறப்படும் நிலையில், அடிக்கடி சீமானை விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது ஒரு வீடியோவை அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “சீமானுக்கு ஒன்னுமே தெரியாது. சாட்டை துரைமுருகன் சொல்வதைத்தான் சீமான் கேட்கிறார். சீமான் அவர்களே.. நான் தமிழ் பொண்ணே இல்லைன்னு உங்க கட்சிக்காரங்க சொன்னாங்களே ஏன் உங்களுக்கு அது தெரியாதா..? தெரிஞ்சும் தெரியாத மாதிரி சும்மாவே இருந்தீங்க.

எனக்கு 4 புருஷன்னு சொல்லி அபாண்டமான பொய்யை சொன்னாங்களே. எனக்கு திருமணமே ஆகலனு உங்களுக்கு தெரியாதா சீமான்..? இப்படி எதுவுமே தெரியாம தான் தமிழ்நாட்டுல கட்சி நடத்திட்டு இருக்கீங்களா..? போன வருஷம் உங்க மேல புகார் கொடுத்தனே அதுவாச்சும் எதுக்குனுக்கு தெரியுமா..? நீங்க சொன்ன மாதிரி மாதம் ரூ.50,000 கொடுத்திருந்தா இந்த பிரச்சனையே உங்களுக்கு இருக்காது. பெண் பாவம் பொல்லாதது சீமான் அவர்களே.. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்னு நினைச்சிட்டு இருக்கீங்களா..? திமுக கிட்ட காசு வாங்கிட்டு இந்த மாதிரிலாம் பண்ணிருந்தா எங்க அக்கா இப்படி படுத்த படுக்கையா இருப்பாங்களா..? என சீமானை விளாசியுள்ளார்.

Read More : இன்னும் சில மணி நேரங்களில்..!! கட்சிக் கொடியை அறிமுகம் செய்கிறார் தவெக தலைவர் விஜய்..!!

Tags :
Advertisement