OPS vs OPS: ஒரே தொகுதியில் 5 ஓபிஎஸ் போட்டி.!! ஓ.பன்னீர் செல்வத்திற்கு வந்த புது சிக்கல்.!!
ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்(OPS) பாஜக ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பேரில் மேலும் 4 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்
முன்னாள் முதல்வரும் அதிமுக கட்சியில் துணைப் பொதுச் செயலாளர் ஆகவும் பதவி வைத்தவர் ஓ.பன்னீர்செல்வம்(OPS). அவர்களது கட்சியில் ஏற்பட்ட தகராறு தொடர்ந்து அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். மேலும் இவருக்கு கட்சியின் சின்னம் கொடி லெட்டர் பேட் கரைவேட்டி போன்றவற்றை பயன்படுத்துவதற்கும் உயர்நீதிமன்றம் தடை விதித்தது சமீபத்தில் இந்த தடையை எதிர்த்து அவர் பதிவு செய்த மனமும் தள்ளுபடி செய்யப்பட்டது.
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான கூட்டணியில் இணைய இருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் தென் மாவட்டங்களில் தங்களுக்கு சில தொகுதிகள் ஒதுக்கப்படும் எனவும் எதிர்பார்த்தார். ஆனால் துரதிஷ்டவசமாக ஓ.பன்னீர் செல்வத்திற்கு எந்த தொகுதியும் ஒதுக்கப்படவில்லை. இந்நிலையில் அவர் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளராக ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட இருக்கிறார்.
தனி சின்னத்தில் போட்டியிட போவதாக அறிவித்த ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் பதிவு செய்த அதே நாளில் ராமநாதபுரம் மாவட்டம் மேக்கிழார்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் என்பவரும் சுயேட்சையாக போட்டியிடுவதாக வேட்பு மனுதாக்கல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக மேலும் 3 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-க்கு எதிராக இதுவரை சுயேட்சை வேட்பாளர்கள் 4 பேர் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். ஓ பன்னீர் செல்வத்தின் வெற்றியை எப்படியாவது தடுக்க வேண்டும் என்ற எடப்பாடி பழனிச்சாமியின் திட்டமாகவும் இது இருக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பேச்சு நிலவுகிறது.