முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மின்சார கம்பிகள் அறுந்து விழுந்து 4 பேர் ஒரே நாளில் உயிரிழப்பு...! பாஜக முக்கிய குற்றச்சாட்டு

4 people lost their lives in a single day when power lines fell down
11:21 AM Oct 15, 2024 IST | Vignesh
Advertisement

தமிழகம் முழுதும் மின்சார கம்பிகள் அறுந்து விழுந்து உயிரிழந்த நபர்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாஜக மாநில செயலர் அஸ்வத்தாமன் வலியுறுத்தி உள்ளார்.

Advertisement

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி தொடர்ந்து அது அந்தப் பகுதியில் நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து, வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து புதுவை, வடதமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரை அருகில் நிலை கொள்ளும். இதன் காரணமாக, அடுத்து வரும் 5 தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை தொடரும், என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுதும் மின்சார கம்பிகள் அறுந்து விழுந்து ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த நபர்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக பாஜக செயலாளர் அஸ்வத்தாமன் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து தமிழக பாஜக மாநில செயலர் அஸ்வத்தாமன் வெளியிட்ட அறிக்கையில்; தமிழகம் முழுதும் மின்சார கம்பிகள் அறுந்து விழுந்து மதுரை மாவட்டம் மேலூரில் கணேசன், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அய்யாக்கண்ணு, கடலூர் மாவட்டம் தொழுதூரை அடுத்த இராமநத்தம் பகுதியில் காயத்ரி என்ற 13 வயது சிறுமி, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகில் குமரேசன் என மொத்தம் 4 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். மெரினாவில் நடந்த விமான சாகச காட்சியில், ஏற்பாடுகள் மாநில அரசால் சரியாக செய்யப்படாததால் 5 பேர் இறந்தனர். இவர்கள் 9 பேரின் குடும்பத்திற்கும் தலா 10 லட்சம் இழப்பீடாக திராவிட மாடல் அரசு உடனடியாக வழங்க வேண்டும். கள்ள சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு மட்டும் தான் திராவிட மாடல் அரசு இழப்பீடு தருமா..?

இந்த மரணங்கள் அனைத்துமே திராவிட மாடல் அரசின் பொறுப்பற்ற தன்மை காரணமாகவே நடந்துள்ளது. இதற்கு தார்மீகமாக பொறுப்பேற்று உடனடியாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இழப்பீட்டு தொகையை திராவிட மாடல் அரசு விடுவிக்கவேண்டும். மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி அவர்கள் மீண்டும் பொறுப்பேற்ற பிறகு மின்சாரத்துறை மிக மோசமாக செயல்பட தொடங்கியுள்ளது. தலைநகரமான சென்னையில் பல இடங்களில் பலமணி நேர மின்வெட்டு தொடர்கிறது. மயிலாடுதுறை குத்தாலத்தில் இரவு முழுதும் மின்வெட்டு தொடர்ந்து நிலையில் பொதுமக்கள் சென்று பார்த்தபோது, அங்கு மின்சார ஊழியர்கள் குடிபோதையில் மயங்கி கிடந்துள்ளனர்.

சாராயம் விற்கும் துறைக்கும் அமைச்சராக செந்தில் பாலாஜி தான் உள்ளார். ஆக சாராயம் விற்கும் அந்த வேலையை மட்டும் அவர் ஒழுங்காக செய்கிறார். எனவே மின்சாரத்துறை சீர்கேடுகள் உடனடியாக களையப்பட வேண்டும். மழைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், மின்கம்பிகள் அறுந்து விழுந்து நடக்கும் மரணங்கள் தடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags :
BJPdeathDmkmk stalin
Advertisement
Next Article