மக்களே...! இன்று முதல் அமலுக்கு 4 முக்கிய மாற்றங்கள்...! முழு விவரம்
காலனி விலை உயர்வு :
இன்று முதல் காலணிகளின் விலையும் உயர உள்ளது. புதிய விதிகளின்படி காலணிகளை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும். காலணிகள் தொடர்பாக, இன்று முதல் புதிய தரநிலைகள் அமலுக்கு வந்தது. தயாரிக்கப்பட்ட காலணிகள், பூட்ஸ் மற்றும் செருப்புகள் இந்த தரநிலைகளுக்கு இணங்க வேண்டும் என்று இந்திய தரநிலை பணியகம் (பிஐஎஸ்) தெளிவுப்படுத்தியுள்ளது. இதனால், இந்த மாதம் முதல் காலணிகளின் விலை உயர வாய்ப்புள்ளது. திருத்தப்பட்ட BIS விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வரும்
வரி தாக்கல் :
வரி செலுத்துவொர் அனைவரும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இன்று முதல் ஐடிஆர் தாக்கல் செய்யும் நபர்கள் அபராதத்துடன் அதை செலுத்த வேண்டும்.
சிலிண்டர் விலை
ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலையில் மாற்ற வருகிறது. கடந்த மாதம், அதாவது ஜூலை மாதத்தில் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலையை மத்திய அரசு குறைத்தது. ஆகஸ்ட் 1 ஆம் தேதியான இன்று மேலும் குறைக்கப்படலாம் என்றும், வீட்டு உயபோக சிலிண்டர் விலையிலும் மாற்றம் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கி வாடிக்கையாளர்கள் வாடகை :
ஆகஸ்ட் 1 முதல், CRED, Cheq, MobiKwik மற்றும் Freecharge போன்ற சேவைகளைப் பயன்படுத்தும் வங்கி வாடிக்கையாளர்கள் வாடகை செலுத்துவதற்கு பரிவர்த்தனை தொகையில் 1 சதவீதம் வசூலிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.3,000 வரை கட்டுப்படுத்தப்படும். மேலும், ரூ.15,000க்கு கீழ் உள்ள எரிபொருள் பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது. ஆனால் ரூ.15,000க்கு மேல் உள்ள பரிவர்த்தனைகளுக்கு 1 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும்.
வங்கி விடுமுறை
ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 8 நாட்கள் விடுமுறை வருகிறது. இதில் 4 ஞாயிற்றுக் கிழமைகள் மற்றும் இரண்டு சனிக்கிழமைகள் அடங்கும். இதுதவிர ஆகஸ்ட் 15 மற்றும் ஆகஸ்ட் 26 ஆகிய தினங்களும் வங்கிகள் இயங்காது.