ஜார்க்கண்ட் குண்டுவெடிப்பில் 4 பேர் பலி!… பீதியில் மக்கள்!
Jharkhand blast: ஜார்க்கண்ட் மாநிலம் பாலமுவில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
மக்களவை தேர்தலையொட்டி, இன்று 10 மாநிலங்களில் 96 தொகுதிகளில் நான்காவது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதோடு சேர்த்து ஆந்திராவுக்கான சட்டமன்ற தேர்தலும் இன்று நடைபெற்று வருகிறது. மேலும் ஒடிசாவில் முதல் கட்டமாக 28 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலை பொருத்தவரை ஆந்திராவில் 25 தொகுதிகளும், தெலுங்கானாவில் 17 தொகுதிகளும், பீகாரில் 5, ஜார்க்கண்டில் 4, மத்திய பிரதேச மாநிலத்தில் 8 தொகுதிகளும், மகாராஷ்டிராவில் 11 தொகுதிகள், ஒடிசாவில் நான்கு தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் எட்டு தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதி என மொத்தம் 96 தொகுதிகள் நாடாளுமன்ற நான்காம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், ஜார்க்கண்டில் சிங்பூம், குந்தி, லோஹர்தகா மற்றும் பலமு ஆகிய நான்கு மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், மாநிலத் தலைநகர் ராஞ்சியில் இருந்து 190 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மனாட்டு காவல் நிலையப் பகுதியில் உள்ள ஸ்கிராப் வியாபாரிக்கு சொந்தமான இடத்தில் மாலை 5 மணியளவில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில், 3 சிறார்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடிவிபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், இறந்தவரின் வீட்டில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் தற்செயலாக வெடித்ததால் வெடித்ததாக கூறப்படுகிறது. தடய அறிவியல் ஆய்வகத்தின் (எஃப்எஸ்எல்) நிபுணர்களும் அந்த இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.
Readmore: கொத்து கொத்தாக போன உயிர்கள்!… 500ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!… பரிதவிக்கும் மக்கள்!