முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Actor ajith: 4 மணிநேர அறுவை சிகிச்சை!… மூளையில் இருந்த கட்டி அகற்றம்!... நடிகர் அஜித் பற்றி வெளியான தகவல்!

07:00 AM Mar 08, 2024 IST | 1newsnationuser3
Advertisement

Actor ajith: நடிகர் அஜித் குமாருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்து கட்டி அகற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் “விடா முயற்சி" (Vidaa Muyarchi) என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இந்தநிலையில், நேற்று நடிகர் அஜித், சென்னை உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு விரிவான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.

பரிசோதனையின் இறுதியில், அஜித்தின் மூளையில் ஒரு சிறிய கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மதுரை மற்றும் கேரளாவில் இருந்து 2 மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு நடிகர் அஜித் குமாருக்கு மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அறுவை சிகிச்சை சுமார் 4 மணி நேரம் நடைபெற்றதாகவும், தற்போது அஜித் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Readmore:கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அரசு ஒப்புதல்…!

Tags :
4 மணிநேர அறுவை சிகிச்சைactor ajithநடிகர் அஜித்மூளையில் இருந்த கட்டி அகற்றம்
Advertisement
Next Article