For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

4 கோடி மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிப்பு..!! 6.3 லட்சம் பேர் உயிரிழப்பு..!! ஐநா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

Around 40 million people around the world were infected with HIV last year. According to the UN, 90 lakh people are living with the disease and are not receiving any treatment. Shocking information has been released.
06:54 PM Jul 23, 2024 IST | Chella
4 கோடி மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிப்பு     6 3 லட்சம் பேர் உயிரிழப்பு     ஐநா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
Advertisement

உலகமெங்கிலும் கடந்தாண்டில் சுமார் 4 கோடி மக்கள் ஹெச்.ஐ.வி. நோய் பாதிப்புடன் வாழ்ந்து வருவதாகவும், அதில் 90 லட்சம் மக்கள் எந்த சிகிச்சையும் எடுக்காமல் இருப்பதாகவும் ஐ.நா. அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

Advertisement

இதுகுறித்து ஐ.நா சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “கடந்த ஆண்டில் உலகம் முழுக்க 4 கோடி மக்கள் ஹெச்.ஐ.வி வைரஸ் பாதிப்பினால் ஏற்படும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பால், நிமிடத்திற்கு ஒருவர் இறக்கின்றனர். எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்ரிக்கா, கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா, லத்தீன் அமெரிக்கா போன்ற பகுதிகளில் நிதிகள் கிடைக்காமல் இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறைந்து, புதிய நோய்த் தொற்றுகள் உருவாகி வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்தாண்டில் மட்டும் 6.3 லட்சம் மக்கள் எய்ட்ஸ் நோய்களால் உயிரிழந்துள்ளனர். 2004ஆம் ஆண்டில் 21 லட்சம் மக்கள் உயிரிழந்ததே இதுவரையிலான அதிகபட்சமாகும். ஆனால், 2025இல் உயிரிழப்புகள் 2.5 லட்சமாக குறையும் என்று கணிக்கப்பட்ட நிலையில், அவை அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது என ஐ.நா.- வின் எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுக்க ஒதுக்கப்பட்டு, பாகுபாடு காட்டப்படுபவர்களான பாலியல் தொழிலாளர்கள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் மட்டுமின்றி போதைப் பொருள் உபயோகிப்பவர்களும் கடந்த ஆண்டில் 55% உயர்ந்துள்ளனர். இது 2010-ல் 45 சதவீதமாக இருந்தது.

ஐ.நா. எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பின் நிர்வாக இயக்குநர் வின்னி பியான்யிமா கூறுகையில், “உலகத் தலைவர்கள் எய்ட்ஸ் தொற்றை பொது சுகாதார அச்சுறுத்தலாகக் கருதி 2030-க்குள் ஒழிக்க உறுதியெடுத்துள்ளனர். அதன்படி, 2025-க்குள் ஹெச்.ஐ.வி. தொற்றை 3.7 லட்சமாக குறைக்க உறுதியளித்துள்ளனர். ஆனால், 2023ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, புதிய தொற்றுகள் 13 லட்சமாக, கிட்டத்தட்ட 3 மடங்கு உயர்ந்துள்ளது.

ஹெச்.ஐ.வி. சிகிச்சையில் முன்பைவிட முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு ஊசி மூலம் 6 மாதங்கள் வரை நோயைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம் என்றும், ஆனால் ஆண்டுக்கு இரு ஊசிகளுக்கு ஆகும் செலவு இந்திய மதிப்பில் ரூ.33 லட்சம் வரை ஆகுமென்று ஐ.நா. எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பின் இயக்குநர் சிசர் நுனெஸ் தெரிவித்துள்ளார். வசதி படைத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தும் இந்த மருந்துகளைக் குறைவான வருமானம் கொண்ட நாடுகளிலும் பாதிக்கப்பட்ட மக்கள் பயன்படுத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Read More : ”நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்கான பட்ஜெட் தான் இது”..!! ராகுல் காந்தி கடும் விமர்சனம்..!!

Tags :
Advertisement