குளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சி.! முகத்தைக் காத்துக் கொள்ள உதவும் 4 அற்புத பழங்கள்.!
குளிர் காலம் வந்தாலே காய்ச்சல் மற்றும் சளி போன்ற நோய்கள் வருவதோடு பல்வேறு விதமான சரும பிரச்சனைகளும் ஏற்படும். இதற்கு குளிர்காலத்தில் காற்றில் ஈரப்பதம் இல்லாமல் இருப்பதே முக்கிய காரணமாகும். காற்றில் ஈரப்பதம் இல்லாமல் இருப்பதால் முகத்தில் வறட்சி ஏற்பட்டு சருமம் பொலிவிழந்து இருக்கும். மேலும் குளிர்காலத்தின் போது அதிக தண்ணீர் குடிப்பதையும் தவிர்த்து விடுவோம். இதன் காரணமாகவும் நமது முகத்தில் எரிச்சல் மற்றும் பருக்கள் போன்றவை ஏற்படவும் காரணமாக அமைகிறது.
இவற்றிற்கு பலரும் மாய்ஸ்ட்ரைசர் கிரீம்களை பயன்படுத்துகின்றனர். எனினும் சருமப் பிரச்சனைகளுக்கு முஸ்லிம்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் மட்டும் போதாது. நாம் சாப்பிடும் உணவிலும் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என அழகுக் கலை நிபுணர்களும் தோல் மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர். இதன் அடிப்படையில் சத்துக்கள் நிறைந்த பழங்கள் சாப்பிடுவதன் மூலம் குளிர்காலங்களில் ஏற்படும் சரும பிரச்சனைகளை எளிதாக எதிர்கொள்ளலாம் என அறிவுறுத்துகின்றனர்.
சரும பாதுகாப்பிற்கு மாதுளை சாப்பிடும் படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதில் இருக்கக்கூடிய வைட்டமின்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் ஆன்ட்டி ஏஜிங் தன்மை கொண்டது. இவற்றைத் தொடர்ந்து சாப்பிடுவதால் முகப்பருக்கள் வராது. முகத்தில் ஏற்படும் சுருக்கம் மற்றும் வறட்சியையும் தடுக்கிறது. இவை சருமத்தில் இருக்கும் கிருமிகளை நீக்கி இருப்பதுத்துடனும் நீரேற்று தொடனும் இருக்குமாறு வைத்துக் கொள்கிறது. நம் உடலுக்கு பல்வேறு ஊட்டச்சத்துக்களை தருகின்ற ஆப்பிள் நமது சருமத்திற்கும் பல்வேறு நன்மைகளை தருகிறது. இதில் இருக்கக்கூடிய பெக்டின் சரும வறட்சியை போக்கி எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறது. எனவே குளிர்காலத்தில் ஆப்பிள் பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வர முக வறட்சி நீங்கும்.
குளிர்காலத்தில் முக அழகை பேணுவதற்கு ஆரஞ்சு ஒரு சிறந்த பழமாகும். பெரும்பாலான ஃபேஸ் பேக் தயாரிப்புகளில் ஆரஞ்சு முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் இருக்கும் வைட்டமின் சி உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழக்குவதோடு கொலாஜன் உற்பத்தியில் முக்கிய பங்கு வைக்கிறது. இதன் காரணமாக வயது முதிர்ந்த தோற்றம் நீங்கி முகம் புது பொலிவுடன் இருக்கும். குளிர்காலத்தில் சருமத்தை பாதுகாப்பதில் வாழைப்பழத்தின் பங்கு முக்கியமானது. இவற்றில் வைட்டமின்களான பி6 வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. இவை சரும வறட்சியை போக்குவதோடு கூந்தல் வறட்சியையும் சரி செய்கிறது.