For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Central govt : 4 மாதத்திற்கு ஒரு முறை 2000 ரூபாய் வழங்கும் மத்திய அரசு திட்டம்...! ரூ.3 லட்சம் கோடியை கடந்தது...!

06:10 AM Mar 01, 2024 IST | 1newsnationuser2
central govt   4 மாதத்திற்கு ஒரு முறை 2000 ரூபாய் வழங்கும் மத்திய அரசு திட்டம்     ரூ 3 லட்சம் கோடியை கடந்தது
Advertisement

பிரதமர் வேளாண் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயன் தொகை ரூ.3 லட்சம் கோடியை கடந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisement

மகாராஷ்டிரா மாநிலம் யவத்மாலில் இத்திட்டத்தின் 16-வது தவணைத் தொகையை பிரதமர் நரேந்திர மோடி விடுவித்ததையடுத்து இதுவரை 11 கோடிக்கும் மேற்பட்ட தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட பயன்தொகை ரூ.3 லட்சம் கோடியை கடந்தது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் மட்டும் தகுதியுடைய விவசாயிகளுக்கு ரூ.1.75 லட்சம் கோடி அளிக்கப்பட்டது.

விவசாயிகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையிலும், அவர்களின் குடும்பத்தினருக்கு வருவாய் ஆதரவுக்காகவும் பிரதமரின் வேளாண் வருவாய் ஆதரவு திட்டம் 2019 பிப்ரவரி 2 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 4 மாதத்திற்கு ஒரு முறை 2000 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி அளிக்கப்படுகிறது. நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் போது மேலும் 90 லட்சம் புதிய விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : A central government scheme that provides Rs 2000 once a four month

Advertisement