For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

1 நிமிடத்திற்கு 4.50 லட்சம் தோட்டாக்கள்..!! ஏவுகணைகளையே திருப்பி அடிக்கும்..!! அமெரிக்காவை விட 100 மடங்கு பலம்..!! சீனாவில் தயாராகும் ராட்சத துப்பாக்கி..!!

Shocking news has emerged that China is developing a gun that can fire 450,000 bullets per minute.
04:24 PM Jan 08, 2025 IST | Chella
1 நிமிடத்திற்கு 4 50 லட்சம் தோட்டாக்கள்     ஏவுகணைகளையே திருப்பி அடிக்கும்     அமெரிக்காவை விட 100 மடங்கு பலம்     சீனாவில் தயாராகும் ராட்சத துப்பாக்கி
Advertisement

1 நிமிடத்திற்கு 4.50 லட்சம் புல்லட்டுகளை சுடக்கூடிய துப்பாக்கியை சீனா உருவாக்கி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த துப்பாக்கிகளை பயன்படுத்தி ஹைப்பர்சானிக் ஏவுகணைகளையும் தாக்க முடியும் என்று கூறப்படுகிறது. சீனாவின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனை மனிதகுல வரலாற்றில் மிகவும் சக்தி வாய்ந்த துப்பாக்கி என்று கூறப்படுகிறது. அமெரிக்காவிடம் உள்ள துப்பாக்கிகளை பயன்படுத்தி அதிகபட்சமாக ஒரு நிமிடத்திற்கு 4,500 தோட்டாக்களை மட்டுமே சுட முடியும்.

Advertisement

அதன் அடிப்படையில் சீனா தயாரிக்கும் துப்பாக்கிகள், அமெரிக்கா வைத்திருக்கும் துப்பாக்கிகளை விட 100 மடங்கு சக்தி வாய்ந்தவகையாக இருக்க வேண்டுமென சீனா முடிவு செய்துள்ளது. முதலில் இதற்கு தோட்டாக்களை நிரப்புவது சவாலானதாக காணப்பட்டது. ஆனால், சீன பொறியியல் வல்லுநர்கள் இந்த துப்பாக்கிக்கு பீப்பாய்களை பயன்படுத்தி தோட்டாக்களை நிரப்புகின்றனர். புல்லட்டுகள் முழுவதுமாக தீர்ந்த பிறகு பீப்பாய் கொள்கலனில் தோட்டாக்கள் நிரப்பப்படும்.

இந்த 4.50 லட்சம் தோட்டக்களை சுடும் ஆயுத தொழில்நுட்பம் ஆஸ்திரேலிய நாட்டில் தோன்றியதாக கூறப்படுகிறது. இதனை 2006ஆம் ஆண்டின் போது சீனா சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கி தொழில்நுட்பத்தை பெற்றுக் கொண்டதாக சீன செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பலகட்ட ஆராய்ச்சிக்கு பிறகு சீனா தற்போது இந்த அதிரடியான துப்பாக்கியை வடிவமைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Read More : கர்ப்பமாக இல்லை..!! ஆனால் மார்பகங்களில் இருந்து பால் வருகிறதா..? அலட்சியம் வேண்டாம்..!! உடனே மருத்துவரை பாருங்க..!!

Tags :
Advertisement