3ஆம் கட்ட வாக்குப் பதிவு நிறைவு…61.45% வாக்குகள் பதிவு…அதிரடி காட்டிய அசாம்..!!
நாடு முழுவதும் 11 மாநிலங்களில் உள்ள 93 தொகுதிகளுக்கான 3ஆம் கட்ட தேர்தலில் மொத்தம் 61.45% வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்தியாவில் 11 மாநிலங்களில் உள்ள 93 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு நேற்று (மே7) நடைபெற்றது. இதில் குஜராத்தில் ஒரே கட்டமாக 25 தொகுதிகள், கர்நாடகாவில் மீதமுள்ள 14 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 11, உத்தரப்பிரதேசத்தில் 10, மத்தியபிரதேசத்தில் 9, சத்தீஸ்கரில் 7, பீகாரில் 5, அசாம், மேற்கு வங்கத்தில் தலா 4, கோவாவில் 2, தாத்ரா-நகா் ஹவேலி மற்றும் டாமன்-டையூ யூனியன் பிரதேசத்தில் 2 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 61.45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
காலை 7 மணிக்கு தொடங்கிய 3ஆம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது. மேலும் இந்த தேர்தலில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜோதிர் ஆதித்ய சிந்தியா, டிம்பில் யாதவ், சிவராஜ் சிங் சவுகான், உள்ளிட்ட 1,352 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதனிடையே, வாக்களிப்பதற்காக வருகை தந்த பிரதமர் மோடியை குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர பட்டேல், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் வரவேற்றனர்.இதனைத் தொடர்ந்து, குஜராத் மாநிலம் அஹமதாபாத் கிழக்கு தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் பிரமதர் தமது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். வன்முறை இல்லாத தேர்தல் இதுவெனவும் சிறப்பாக பணியாற்றிய தேர்தல் ஆணையாளருக்கு தமது பாராட்டுகளையும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
உலகின் ஜனநாயக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இந்தியாவின் தேர்தல் நடைமுறையுள்ளதாகவும் 64 நாடுகளில் இந்தத் தேர்தல் நடைமுறை உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். இந்நிலையில் 61.45% வாக்குகள் பதிவாகியுள்ளன.
மாநில வாரியாக விவரங்கள் இதோ…!
அசாம்: 75.26%
பீகார்: 56.55%
சத்தீஸ்கர்: 66.99%
கோவா: 74.27%
குஜராத்: 56.76%
கர்நாடகா: 67.76%
மத்தியப் பிரதேசம்: 63.09%
மகாராஷ்டிரா: 54.77%
உத்தரப் பிரதேசம்: 57.34%
மேற்கு வங்காளம்: 73.93%
Read More: 4ம் ஆண்டில் முதல்வர் ஸ்டாலின் : திமுகவின் மூன்றாண்டு ஆட்சியில் நிறைவேற்றியுள்ள திட்டங்கள் என்னென்ன?