3ஆம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவினராக கருத வேண்டும்..!! தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு..!!
கல்வி, வேலைவாய்ப்பில் 3ஆம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவினராக கருத வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்வி, வேலைவாய்ப்பில் 3ஆம் பாலினத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க
வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவின்படி, 3ஆம் பாலினத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு
வழங்கக் கோரி,கிரேஸ் பானு கணேசன் என்ற மூன்றாம்
பாலினத்தவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், மூன்றாம் பாலினத்தவர்கள்
குறித்த கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. பின்னர், தமிழ்நாடு அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்த தேவையான
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மூன்று மாதங்களில் இப்பணிகள் முடிக்கப்படும் எனவும் தெரிவித்தது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “கணக்கெடுப்பின் அடிப்படையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக உரிய முடிவை எடுக்க வேண்டும்” என அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தான் கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவினராக கருத வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. உரிய வாய்ப்புதர மறுத்தால், கல்வித் தகுதி பெற்ற 3ஆம் பாலினத்தவர், சமூகத்தில் அசாதாரணமான வாழ்க்கைக்கு தள்ளப்படுவர் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். குரூப் 2 ஏ தேர்வில் பங்கேற்ற 3ஆம் பாலின விண்ணப்பதாரர் அனுஸ்ரீ, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதி வழங்கக் கோரி மனு தாக்கல் செய்த மனுவில் நீதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Read More : இனி புதிதாக கட்டப்படும் வீடுகளில் இது கட்டாயம்..!! அரசு எடுத்த மாஸ் முடிவு..!! மக்கள் ஹேப்பி..!!