டிரம்ப் மீது 3வது முறையாக கொலை முயற்சி!. துப்பாக்கி, போலி பிரஸ் கார்டுடன் இருந்த நபர் கைது!
Trump: அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, டொனால்ட் டிரம்பை 3வது முறையாக கொலை செய்ய முயற்சியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் நவ.5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், மூன்றாவது முறையாக குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்பை தாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக, ஜூலை 13 அன்று, பென்சில்வேனியாவின் பட்லரில் பேரணியில் ஈடுபட்டிருந்தபோது, மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் டிரம்ப் காயமடைந்தார். துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக மேத்யூ க்ரூக்ஸ் என்ற நபரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். இதையடுத்து, செப்டம்பரில் இரண்டாவது முறையாக தாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கோல்ஃப் மைதானத்தில் டிரம்பை கொல்ல முயன்றதற்காக ரியான் வெஸ்லி ரூத் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில், ட்ரம்பை கொல்ல 3வது முறையாக முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது, கோசெல்லாவில் டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்தின்பேரில் சுற்றித்திரிந்த நபரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். போலி பாஸ் மற்றும் துப்பாக்கியுடன் வந்த அந்த நபர் லாஸ் வேகாஸ் நகரை சேர்ந்த வெம் மில்லர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
Readmore: ஜம்மு காஷ்மீரில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!