முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Breaking!... 397 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி!...+2 தேர்வு முடிவுகள் வெளியானது!

09:43 AM May 06, 2024 IST | Kokila
Advertisement

2 Result Released: தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதன்படி, 397 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.

Advertisement

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெற்றது. மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணியும் நிறைவு பெற்றது.

இந்த நிலையில் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி சரியாக 9.30 மணிக்கு வெளியானது.மாணவ-மாணவிகள் வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்ள ஏதுவாக அவா்கள் பள்ளிகளில் அளித்திருந்த கைப்பேசி எண்ணுக்கு மதிப்பெண் விவரம் வழக்கம்போல அனுப்பி வைக்கப்படவுள்ளது.

மேலும், இணையதளங்களிலும் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://www.dge.tn.gov.in மற்றும் https://www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் பார்த்துக் கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும் தேர்வு முடிவுகளை அறியலாம்.மாணவர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மதிப்பெண் பட்டியல் தேவைப்படும் மாணவர்கள் இன்றே பள்ளியில் பெற்றுக்கொள்ளலாம்.

தேர்வு முடிவுகளின்படி, 397 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 2478 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்க்கும் முயற்சிக்கு இந்த முடிவுகள் சாதகமாக அமைந்துள்ளன.

Readmore: ஊட்டிக்கு செல்ல இ-பாஸ் பெறுவது எப்படி? இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

Advertisement
Next Article