முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Election 2024: ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 370 ஓட்டுகள்!… அமித்ஷாவின் திட்டம் என்ன?

08:17 AM Feb 26, 2024 IST | 1newsnationuser3
Advertisement

Election 2024: மக்களவை தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 370 கூடுதல் வாக்குகளைப் பெறுவதற்கு பாடுபட வேண்டும் என்று தொண்டர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

மக்களவை தேர்தல் நெருங்குவதால், மத்தியப் பிரதேசத்தில் கள நிலவரத்தை தேர்தல் கள நிலவரங்களை அறிந்து, மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான உத்திகள் குறித்து அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். அப்போது, லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 100 நாட்கள் உள்ளன என்றும் ஒவ்வொரு வாக்கும் கட்சிக்கு முக்கியமானது, கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், ஒவ்வொரு சாவடியிலும் கூடுதலாக 370 வாக்குகள் பெறுவதை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வாக்குப் பங்கை 10 சதவீதம் அதிகரிக்க பாஜக தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 மக்களவை தொகுதிகளிலும் வெற்றி பெற பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு மாநிலத்தில் பாஜக 28 இடங்களில் வெற்றி பெற்றது. முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் கோட்டையான சிந்த்வாரா, ஒரு இடத்தில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

English Summary: Election 2024 | Union Home Minister Amit Shah has appealed to the volunteers to strive for 370 additional votes in each polling station in the Lok Sabha elections.

Readmore:  சூதாட்ட மோகத்தில் தாய் கொலை.! பணத்திற்காக மகன் செய்த கொடூரம்.!

Tags :
370 votes370 ஓட்டுகள்amit shahElection 2024அமித்ஷா இரங்கல்வாக்குச்சாவடி
Advertisement
Next Article