For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'எல்லாம் லாக் டவுன்ல நடந்தது..' 4 ஆண்டுகளில் 36,137 சிறுமிகள் கர்ப்பம்! அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள்.!

11:14 AM May 14, 2024 IST | Mari Thangam
 எல்லாம் லாக் டவுன்ல நடந்தது    4 ஆண்டுகளில் 36 137 சிறுமிகள் கர்ப்பம்  அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள்
Advertisement

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 36,137 சிறுமிகள் கர்ப்பம் அடைந்திருப்பதாக ஆர்டிஐ தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞரும், குழந்தைகள் உரிமைச் செயல்பாட்டாளருமான சி.பிரபாகரன் என்பவர் தமிழ்நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 18 வயது நிரம்பாத இளம்வயது சிறுமிகள் கர்ப்பம் தரிப்பு குறித்த தகவலை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்றுள்ளார். அதில் பல்வேறு அதிர்ச்சி கலந்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு முதல் கொரோன பரவல் அதிகரித்து வந்தது. இதனால் பல நாடுகள் பாதிக்கப்பட்டது, இதனால் பலர் உயிரிழந்தனர். இந்த சூழ்நிலையிலும் பல்வேறு திருமணங்கள் எளிமையாகவும் சில இடங்களில் ரகசியமாகவும் நடைபெற்றன. அந்த நேரத்தில் சில கிராமங்களில் இளம் வயது திருமணங்கள் அதிக அளவில் நடைபெற்றதாக புகார் எழுந்தது. அதே சமயத்தில் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. அவை அனைத்துக்கும் சான்றாக தற்போது அதிர்ச்சி அளிக்கும் புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது.

வெளியான தகவலின்படி, கடந்த நான்கு ஆண்டுகளில் 18 வயதுக்கு உட்பட்ட சுமார் 30,000 சிறுமிகள் கர்ப்பம் அடைந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கைகளும் இதனை உறுதிப்படுத்துகிறது. முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட சிறுமிகள் கர்ப்பமடைந்தற்கு காதல் விவகாரங்கள் தான் அதிகபட்ச காரணமாக இருக்கிறது.

அத்துடன்  இளம் வயது திருமணம்,  இளம் வயதில் ஈர்ப்பு காரணமாக உடலுறவு, அல்லது பாலியல் வன்கொடுமை போன்ற காரணங்களும் உள்ளன. குழந்தைத் திருமணம் அல்லது பாலியல் அத்துமீறல் ஆகியவற்றின் மீது போக்சோ சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஆனால் முப்பதாயிரம் சிறுமிகள் கர்ப்பம் அடைந்த நிலையில் வெறும் 13,000 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மீதமுள்ள 17,000 குழந்தை திருமணங்கள் அல்லது பாலியல் பலாத்கார சம்பவங்கள் மறைக்கப்பட்டிருக்கிறது. மருத்துவமனைக்கு வரும் இதுபோன்ற விவகாரங்களை அவர்கள் உடனுக்குடன் காவல்துறைக்கு தகவல் அளித்திருந்தால் மீதமுள்ள இளம் வயது கர்ப்பம் விவகாரங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கலாம்

Tags :
Advertisement