For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அப்கிரேட் ஆகிறது 34 தமிழக ரயில் நிலையங்கள்..!! அடிக்கல் நாட்டினார் PM Modi..!!

02:06 PM Feb 26, 2024 IST | 1newsnationuser6
அப்கிரேட் ஆகிறது 34 தமிழக ரயில் நிலையங்கள்     அடிக்கல் நாட்டினார் pm modi
Advertisement

34 தமிழக ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்

Advertisement

எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் நிலையங்களை, உலகத் தரத்தில் மேம்படுத்தும் “அம்ருத் பாரத் நிலையம்” எனும் திட்டத்தை கடந்தாண்டு பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினர். தேர்வான 1,318 ரயில் நிலையங்களில், முதற்கட்டமாக 508 ரயில் நிலையங்களை உலக தரத்தில் மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமர் மோடி கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சில ரயில் நிலையங்களும் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், “அம்ருத் பாரத் நிலையம்” திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 554 ரயில் நிலையங்களுக்கான மேம்பாட்டுப் பணிகளை காணொலி வாயிலாக பிரதமர் இன்று திறந்து வைக்க உள்ளார். “அம்ருத் பாரத் நிலையம்” திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 34 ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளன. அதன்படி, தமிழகத்தின் சென்னை கோட்டத்தில் 7 ரயில் நிலையங்கள், சேலம் கோட்டத்தில் 8 ரயில் நிலையங்கள், திருச்சி கோட்டத்தில் 4 ரயில் நிலையங்கள், மதுரை கோட்டத்தில் 13 ரயில் நிலையங்கள், கேரளத்தின் பாலக்காடு கோட்டத்தில் 9 ரயில் நிலையங்கள், திருவனந்தபுரம் கோட்டத்தில் 3 ரயில் நிலையங்களும் மேம்படுத்தப்பட உள்ளன.

Read More : Lok Sabha | சூடுபிடிக்கும் தேர்தல் களம்..!! 200 கம்பெனி துணை ராணுவம் தமிழ்நாட்டிற்கு வருகை..? தேர்தல் அதிகாரி பரபரப்பு தகவல்..!!

ரயில் நிலைய விவரங்களின்படி, சென்னை கடற்கைரை, பூங்கா, அம்பத்தூர், பரங்கிமலை, கிண்டி, மாம்பலம், மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, ஈரோடு, மொரப்பூர், திண்டுக்கல், தூத்துக்குடி, திருச்செந்தூர், மயிலாடுதுறை, கும்பகோணம், விருத்தாச்சலம், தருமபுரி, ஒசூர் ஆகிய 34 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. அதாவது, சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பது, இலவச வைஃபை வசதி, காத்திருப்பு அறை மற்றும் லிஃப்ட் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்நிலையில், இந்த 34 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

English Summary : Prime Minister Modi today laid the foundation stone for the development of 34 Tamil Nadu railway station

Advertisement