முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழகத்திற்கு மட்டும் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.3354.80 கோடி நிதி விடுவிப்பு...!

06:40 AM Feb 07, 2024 IST | 1newsnationuser2
Advertisement

தமிழ்நாட்டின் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 2014-ம் ஆண்டு முதல் 2024 ஜனவரி 31 வரை தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள தீனதயாள் அந்தியோதயா திட்டத்தின் படி, மத்திய அரசின் நிதியுதவி ரூ.1835.95 கோடியுடன் ரூ. 3354.80 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மக்களவையில் உறுப்பினர் கே சண்முகசுந்தரம், விஷ்ணு தயாள் ராம் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய கிராமத்துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தனது தனது பதிலில்; தமிழ்நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளில் 37 மாவட்டங்களில் 3,36,044 மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மகளிர் சுயஉதவிக் குழுக்களில் 40,02,881 பேர் இடம் பெற்றுள்ளனர்.

2014-15 முதல் 2024 ஜனவரி 31-ந் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள சுயஉதவிக் குழுக்களுக்கு மத்திய அரசு ரூ.1871.65 கோடி ஒதுக்கியது. அதில் ரூ.1835.95 கோடி நிதி தமிழ்நாட்டுக்கு விடுவிக்கப்பட்டது. அதில் மாநில அரசு பங்கும் சேர்ந்து ரூ.3354.80 கோடி நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது.

Tags :
central govtsubcidyWomens
Advertisement
Next Article