டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்ட 33 எம்பி-க்கள் திடீர் சஸ்பெண்ட்..!! நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு..!!
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த மேலும் 33 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி எழுப்பிய 30 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தமிழச்சி தங்கபாண்டியன், சி.என்.அண்ணாதுரை, செல்வம் உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் எம்பிக்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திருநாவுக்கரசர் உள்ளிட்ட 31 எம்.பி.க்கள் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். எம்பிக்களின் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி கடந்த வாரம் மக்களவையில் போராட்டம் நடத்தியதால் திமுக எம்பி கனிமொழி, மார்க்சிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன் உள்ளிட்ட 13 எம்.பி.க்களும் மாநிலங்களவையில் டெரிக் ஓ பிரையனும் உள்ளிட்ட 14 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை, மொத்தமாக எதிர்க்கட்சிகளை சேர்ந்த 47 எம்பிக்கள் மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.