மாதந்தோறும் உங்கள் வங்கிக் கணக்கில் வந்து விழும் ரூ.3,000..!! இந்த திட்டங்களில் சேர்ந்துட்டீங்களா..?
தமிழ்நாட்டில் உள்ள 3 முக்கிய திட்டங்கள் மூலம் மாதம் ரூ.3,000 உங்கள் வங்கி கணக்கில் பெறுவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இது போக புதுமைப்பெண் திட்டம் செயல்பட்டு வருகிறது. அதன்படி, பின்வரும் மக்களுக்கு இந்த திட்டம் விரிவு செய்யப்பட்டு விட்டது. முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் வழங்கப்படுகிறது. முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் வழங்கப்படுகிறது. புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கும், புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு பணம் வழங்கப்படுகிறது.
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்தம் இரண்டரை லட்சம் பேருக்கு இந்த பணம் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் கலைஞர் மகளிர் உரிமை தொகையில் தமிழ்நாட்டில் கூடுதலாக 2.30 லட்சம் பேர் இணைக்கப்பட்டு உள்ளனர். மீதம் 2000 பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். உங்கள் வீட்டில் புதிதாக திருமணம் ஆனவர்கள், அரசு பள்ளிக்கு செல்லும் பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் இருந்தால் உங்களுக்கு வீடு தேடி ரூ.3,000 மொத்தமாக வரும்.
அதன்படி, அரசுப் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த நிலையில்தான் புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளியில் படித்து கல்லூரி சேரும் மாணவர்களுக்கு இந்த நிதி வழங்கப்படும். இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை மாணவர்களுக்கு இந்த தொகை வழங்கப்படும். மாணவர்கள் இதற்காக எங்கும் செல்ல வேண்டியது இல்லை. நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் இதற்கான தொகை செலுத்தப்படும். 'தமிழ் புதல்வன் திட்டம்' என்று இந்த திட்டத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழாதான் விரைவில் நடத்தப்பட உள்ளது.
Read More : பெண்களே..!! செம குட் நியூஸ்..!! மகளிர் உரிமைத்தொகை மேலும் விரிவாக்கம்..? எப்போது தெரியுமா..?