For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தென்கொரிய டிவி நிகழ்ச்சிகளை பார்த்த 30 மாணவர்களுக்கு தூக்கு தண்டனை..!! வடகொரியாவில் அதிரவைக்கும் சம்பவம்..!!

North Korea executes 30 teens for watching South Korean TV shows
09:16 AM Jul 16, 2024 IST | Chella
தென்கொரிய டிவி நிகழ்ச்சிகளை பார்த்த 30 மாணவர்களுக்கு தூக்கு தண்டனை     வடகொரியாவில் அதிரவைக்கும் சம்பவம்
Advertisement

தங்கள் நாட்டின் நாடகங்களை பார்த்ததற்காக வடகொரியாவில், பள்ளி மாணவர்கள் 30 பேருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

வழக்கமாக வடகொரியாவில் கறாரான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் தென் கொரிய மற்றும் அமெரிக்க ஆதரவு செய்தி ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தற்போது மற்றொரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, தங்கள் நாட்டின் நாடகங்களை பார்த்ததற்காக வடகொரியா அரசுப் பள்ளி மாணவர்கள் 30 பேருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டுள்ளதாக தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Chosun TV மற்றும் Korea JoongAng Daily உள்ளிட்ட செய்தி ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. இது குறித்து தென் கொரிய அரசு அதிகாரிகளோ, வடகொரிய அரசு அதிகாரிகளோ அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. எனவே, இந்த செய்தியின் உண்மை தன்மை குறித்து பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அண்டை நாடுகளின் படங்களை பார்த்ததற்காக கொல்லப்படுவது இது முதல்முறையல்ல. கடந்த 2022ஆம் ஆண்டு கொரிய திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் அடங்கிய பெண்டிரைவ் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ததாக ஒருவரை வடகொரிய அரசு சுட்டுக்கொன்றது. இதனை ஐ.நா. உறுதி செய்திருக்கிறது.

அதேபோல, இந்தாண்டு தொடக்கத்தில் இரண்டு இளைஞர்களுக்கு k pop வீடியோவை பார்த்ததற்காக 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இப்படி தொடர்ந்து செய்திகள் தென் கொரிய மற்றும் அமெரிக்க ஆதரவு செய்தி ஊடகங்களால் வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால், இதன் உண்மை தன்மை குறித்த எந்த சரிபார்ப்பும் செய்யப்படுவதில்லை. தென் கொரிய அதிகாரிகள் கூட இது குறித்து உறுதியாக எதையும் பொதுவெளியில் பேசுவதில்லை. வடகொரிய அதிகாரிகளும் இதற்கு மறுப்பு தெரிவிப்பதில்லை. எனவே, சில நேரங்களில் இந்த செய்திகள் வெறும் செய்திகளாகவே சென்றுவிடுகிறது என்பதே நிதர்சனமான உண்மை.

Read More : மகிழ்ச்சி செய்தி…! இந்த 1 கோடி பேருக்கு மின் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை…!

Tags :
Advertisement