For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Maharastra: 30 பேர் கவலைக்கிடம்!… கோவில் பிரசாதம் சாப்பிட்டதால் நிகழ்ந்த விபரீதம்!… தரையில் சிகிச்சை அளிக்கும் அவலம்!

12:56 PM Feb 22, 2024 IST | 1newsnationuser3
maharastra  30 பேர் கவலைக்கிடம் … கோவில் பிரசாதம் சாப்பிட்டதால் நிகழ்ந்த விபரீதம் … தரையில் சிகிச்சை அளிக்கும் அவலம்
Advertisement

Maharastra மாநிலத்தில், கோயில் பிரசாதம் சாப்பிட்ட சுமார் 600 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 30க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானாவில், லோனார் தாலுகாவில் உள்ள கபர்கெடா கோவிலில் நடந்த ஒரு நிகழ்வின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது, பிரசாதம் வாங்கி சாப்பிட்ட பக்தர்கள் உடனடியாக குமட்டல், தலைச்சுற்றல், மயக்கம் போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பிரசாதம் வாங்கி சாப்பிட்ட சிறுவர்கள் அதிகளவில் பாதிப்புக்குள்ளானார்கள். உடனடியாக அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இருப்பினும், மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லாமல் பற்றாக்குறை இருந்ததால், பலருக்கும் மருத்துவமனைக்கு வெளியே சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது. நூற்றுக்கணக்கான நோயாளிகள் தரையில் கிடத்தப்பட்டு, கயிறுகளில் சலைன் பாட்டில்கள் கட்டப்பட்டிருப்பதும், மரங்களில் சலைன் பாட்டில்கள் பிணைக்கப்பட்டிருப்பது போன்றும் காட்சிகள் இணையத்தில் பரவி மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாதிப்புக்குள்ளான 600 பேர்களில், 30 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து புல்தானா மாவட்ட ஆட்சியர் கிரண் பாட்டீல் கூறுகையில், மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால் ஆம்புலன்ஸ் மற்றும் பிற தேவையான உபகரணங்களுடன் மருத்துவர்கள் குழு கிராமத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. பிரசாத்தின் மாதிரிகள் ஆய்வுக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு விசாரணை தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

English summary: In the state of Maharashtra, about 600 people who ate temple prasad have experienced vomiting and fainting spells. It has been reported that more than 30 people are in critical condition.

Readmore: வாகன ஓட்டிகளே!… Driving License புதுப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு!

Tags :
Advertisement