For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கோடீஸ்வரர் ஆகும் 3 ராசிக்காரர்கள்..!! இதை யாராலும் தடுக்க முடியாது..!!

05:10 AM May 05, 2024 IST | Chella
கோடீஸ்வரர் ஆகும் 3 ராசிக்காரர்கள்     இதை யாராலும் தடுக்க முடியாது
Advertisement

ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்களின் பெயர்ச்சி 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படும். குறிப்பாக வியாழன் இடப்பெயர்வு அதாவது குருபகவானின் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவமானதாக பார்க்கப்படுகிறது. காரணம், குரு ராசியில் அமர்வதோ அல்லது குருவின் பார்வை ஒரு ராசியின் மீது படுவதோ அந்த ராசியினருக்கு அசுர வளர்ச்சியை கொடுக்கும். அந்த வகையில், 12 ஆண்டுகளுக்கு பின்னர், கடந்த மே 1ஆம் தேதி குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார். இதனால் அடுத்த ஒரு வருட காலத்துக்கு பணப்பிரச்சனை வருவதற்கு வாய்ப்பே இருக்காது. அப்படி குபேர யோகத்தால் பணத்தை அள்ளப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisement

சிம்மம்

குரு மாற்றத்தால் ஏற்பட்ட குபேர யோகம் சிம்ம ராசியினருக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். வாழ்வில் நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பாராத வகையில், பணவரவு அதிகரிக்கும். கடன் தொல்லைகள் நீங்கி பணத்தை சேமிக்கும் நிலை உருவாகும்.

கன்னி

குபேர யோகம் கன்னி ராசியினர் வாழ்வில் பாரிய திருப்பு முனையாக அமையப்போகிறது. தொழிலில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அடுத்த ஒரு வருட காலத்துக்கு பணத்துக்கு பஞ்சமே இருக்காது.

ரிஷிபம்

குரு பகவான் ரிஷப ராசியில் நுழைந்திருப்பதால் ரிஷப ராசியினருக்கு பல்வேறு வகையிலும் சாதகமான பலன்கள் கிடைக்கும். அடுத்த ஒரு ஆண்டுக்குள் கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்பு காணப்படுகிறது. திருமண வாழ்வில் இருந்து வந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு பிறக்கும்.

Read More : சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை..!! மே 19ஆம் தேதி ஆரம்பம்..!! அம்பேத்கர் பல்கலைக்கழகம் அறிவிப்பு..!!

Advertisement