For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"எனக்கு என்னோட குழந்தை வேணும் சார்" கதறி துடிக்கும் தாய்.. வேலூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

3 years old girl was missing who played outside the home
08:09 PM Jan 29, 2025 IST | Saranya
 எனக்கு என்னோட குழந்தை வேணும் சார்  கதறி துடிக்கும் தாய்   வேலூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
Advertisement

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் தரணி. விவசாயம் செய்து வரும் இவருக்கு பிரியா என்ற மனைவியும், 5 வயதான மகனும், 3 வயதான ஜெயப்பிரியா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், வழக்கம் போல் நேற்று இரவு, இவரது குழந்தைகள் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தனர். இதையடுத்து, பிரியா சிறிது நேரம் வீட்டிற்க்குள் சென்றுள்ளார்.

Advertisement

பின்னர் வெளியே வந்து பார்த்த போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த அவரது 3 வயது மகள் ஜெயப்பிரியாவை காணவில்லை. இதனால் பதறிப்போன பிரியா, தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து தனது குழந்தையை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளார். ஆனால் எங்குத் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், நடந்த சம்பவம் குறித்து குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த குடியாத்தம் தாலுகா போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் காணாமல் போன குழந்தையை போலீசார் மற்றும் அவர்களது உறவினர்கள் தேடி வருகின்றனர். மேலும், குழந்தையை யாராவது கடத்தினார்களா? அல்லது குழந்தை வழி தெரியாமல் வேறு எங்காவது சென்று விட்டதா? போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வீட்டின் முன் விளையாடிய மூன்று வயது சிறுமி காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read more: “விஷால் நடிகைகளை கட்டி அரவணைப்பதை தவறாக நினைக்க கூடாது” பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டி..

Tags :
Advertisement