முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

3 வயது குழந்தையுடன் விளையாடிய தாய்மாமன்; வீட்டில் யாரும் இல்லாத போது நடந்த கொடூரம்..

3-years-old-baby-was-killed-by-uncle
07:36 PM Nov 24, 2024 IST | Saranya
Advertisement

மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தை சேர்ந்தவர் ஜித்து. இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று, ஜித்து சகோதரியின் 3 வயது குழந்தை திடீரென காணாமல் போயுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், குழந்தையை பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் குழந்தை கிடைக்காததால், ஜித்து மற்றும் அவரது சகோதரி இருவரும் சென்று, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisement

போலீசார் நடத்திய விசாரணையில், ஜித்து சிக்கி உள்ளார். சம்பவத்தன்று, ஜித்து அவரது சகோதரியின் 3 வயது குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது ஜித்து விளையாட்டாக குழந்தையை அடித்துள்ளார். இதில் கீழே விழுந்த குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜித்து, சம்பவம் குரிதுஹ் யாருக்கும் தெரியாமல் இருக்க, குழந்தையின் சடலத்தை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு எடுத்துச் சென்று எரித்துள்ளார். போலீசாரின் கிடுக்குபிடி விசாரணையில், ஜித்து காவல்துறையினரிடம் உண்மையை ஒப்புக்கொண்ட நிலையில், போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Read more: “காசுக்காக நீ அவன்கூட படுக்கணும்” கட்டாயப்படுத்திய கணவன்; மறுப்பு தெரிவித்த மருமகளை கடத்தி சென்று, மாமியார் செய்த காரியம்..

Tags :
babyinvestigationmurderuncle
Advertisement
Next Article