ரூ.10 நாணயங்களை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை!. ரிசர்வ் வங்கி அதிரடி!
Rs.10 coins: 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் கடைக்காரர்களின் மீது அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பொதுவாக நாட்டின் பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக நாணயங்களுக்கு பல்வேறு வடிவங்களும் அளிக்கப்படுகின்றன. நாணயங்கள் நீண்ட காலத்திற்கு புழக்கத்தில் இருக்கும் காரணத்தால் பல்வேறு வடிவங்களும் கொண்ட நாணயங்கள் ஒரே நேரத்தில் புழக்கத்தில் இருப்பது இயல்பானது. எனவே மக்கள் அதனை போலியான நாணயம் என நம்பத்தொடங்கி அது காலம் செல்ல செல்ல பத்து ரூபாய் நாணயத்தை வங்கிகள் நிறுத்த போகின்றன என்றும், அவை செல்லாது என்றும் பல வதந்திகள் மக்களிடையே காணப்பட்டது.
இதுதொடர்பாக பொதுமக்களிடையே போதியே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டு மக்களின் தொலைப்பேசி எண்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் அழைப்புகள் விடுத்து, அதனை பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியது. மேலும் 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் பற்றிய சந்தேகங்களைக் கேட்டு தெளிவுபெற 14440 என்ற கட்டணமில்லா சேவையை இந்திய ரிசர்வ் வங்கி மூலம் வழங்கப்பட்டுள்ளது. 03.05.2024 தேதிபடி ரூ.10 நாணயங்கள் 69,696 இலட்சம் நாணயங்களும், ரூ.20 நாணயங்கள் 15,963 இலட்சம் நாணயங்களும் புழக்கத்தில் உள்ளது.
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் செல்லும், அவற்றை செல்லாது என கூறுவதோ, அதனை பணப்பரிமாற்றத்தின் போது கொடுக்கவோ, வாங்கவோ மறுப்பது சட்டப்படி குற்றமாகும். மேலும் இந்திய தண்டனைச் சட்டம் 124A -வின் படி ஒருவர் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்களை வாங்க மறுத்தால் அது குற்றம். அந்த குற்றத்திற்கு மூன்று வருட சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். மேலும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாணயத்தை அவமதிக்கும் வகையில் 10 மற்றும் 20 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கும் நபர் அல்லது கடையின் மீது புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Readmore: குட்நியூஸ்!. தங்கம் வென்றால் ரூ.1 கோடி!. ஒலிம்பிக்ஸ் வீரர்களுக்கு ஊக்கத்தொகை அதிகரிப்பு!.