For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

TVK மாநாட்டு திடலில் 3 டன் குப்பைகள்..!! உணவுகளை வீசிச் சென்ற தொண்டர்களால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம்..!!

Around 3 tons of garbage accumulated in the conference grounds and the public threw away the leftover food, and the area started to smell bad.
11:38 AM Oct 28, 2024 IST | Chella
tvk மாநாட்டு திடலில் 3 டன் குப்பைகள்     உணவுகளை வீசிச் சென்ற தொண்டர்களால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம்
Advertisement

விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு நேற்று பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நிலையில், மாநாட்டு திடலில் சுமார் 3 டன் குப்பைகள் சேர்ந்ததாலும், மீதமான உணவுகளை பொதுமக்கள் வீசிச் சென்றதாலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.

Advertisement

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் 'வெற்றி கொள்கை திருவிழா' என்ற பெயரில் நேற்று (அக்.27) நடைபெற்று முடிந்தது. இந்த மாநாட்டிற்கு 15,000 வாகனங்கள் வந்ததாகவும், சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்று இருக்க வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது. மாநாடு முடிந்தவுடன் புறப்பட்ட வாகனங்கள் ஊர்ந்தபடி சுமார் 4 மணி நேரம் சென்றது. யூ-டர்ன் கூட போட முடியாமல் திருச்சி செல்ல வேண்டிய வாகனங்கள் திண்டிவனம் சென்று அங்கிருந்து மீண்டும் திரும்பி விழுப்புரம் வழியாக சென்றது.

வி.சாலை முதல் விழுப்புரம் வரையிலான 17 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க சுமார் 5 மணி நேரமானது. விழுப்புரம் - திண்டிவனம் வழியாக காலை 5 மணி முதல் பொது போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. வி.சாலையில் இருந்து விழுப்புரத்துக்கு நடந்து வந்தவர்கள் 3 மணி நேரத்தில் வந்துவிட்டாலும், பைக்கில் வந்தவர்கள் வருவதற்கு 5 மணி நேரமானது. இதனால் இப்பகுதியில் மொபைல் பயன்பாடு அதிகரித்ததால் இணையதள சேவை முடங்கியது.

பேருந்துகளில் மாநாட்டிற்கு வந்தவர்கள் வி.சாலையிl இருந்து விக்கிரவாண்டி சுங்கசாவடிக்கு 6 கிமீ நடந்து வந்து அங்கு பூட்டப்பட்டு கிடந்த உணவங்களின் வாசல்களில் படுத்து தூங்கி எழுந்து, அதிகாலை இயக்கப்பட்ட பேருந்தில் தங்கள் ஊருக்கு புறப்பட்டன. மாநாட்டு திடலில் லட்சக்கணக்கான காலி வாட்டர் பாட்டில்கள், உணவு தட்டுகள், குப்பைகள் என சுமார் 3 டன் அளவுக்கான குப்பைகள் இருந்தது. மீதமான உணவுகளை வீசியதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.

Read More : ”பேய்கள் இருப்பது உண்மையென்றால் இதையெல்லாம் ஏன் செய்யல”..? அறிவியல் என்ன சொல்கிறது..?

Tags :
Advertisement