முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அனுமதியின்றி 3 வினாடி வீடியோ..!! நயன்தாரா மீது கேஸ் போட்ட தனுஷ்..!! சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

The judge ordered Nayanthara, her husband Vignesh Shivan and Netflix.
01:52 PM Dec 12, 2024 IST | Chella
Advertisement

கடந்த 2015ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, நயன்தாராவை வைத்து ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தை இயக்கினார். அப்போது முதல் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து வந்த நிலையில், இருவரும் 2022ஆம் அவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட 3 வினாடி வீடியோவை பயன்படுத்தியதாக அப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டதாக நயன்தாரா குற்றம்சாட்டியிருந்தார்.

Advertisement

அனுமதியின்றி படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நயன்தாராவுக்கு தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், நடிகை நயன்தாராவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்டு தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தனுஷ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று (டிசம்பர் 12) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்கும்படி நயன்தாரா, அவரது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த பதில் மனுக்களுக்கு தனுஷ் தரப்பிலும் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கில் இடைக்கால தடை கோரும் மனு மீது ஜனவரி 8ஆம் தேதி இறுதி விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

Read More : அரசுக்கு சொந்தமான ஓட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்..!! ஆடிப்போன அமைச்சர்..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

அரசுக்கு சொந்தமான ஓட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்..!! ஆடிப்போன அமைச்சர்..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

சென்னை மக்களே..!! அடுத்த ரவுண்டுக்கு ரெடியா..!! வெளுத்து வாங்கப் போகும் மழை..!! மாலை கடையை மூடிவிடலாம்..!! பிரதீப் ஜான் பதிவு..!!

Tags :
சென்னை உயர்நீதிமன்றம்தனுஷ்நயன்தாராநானும் ரௌடி தான்விக்னேஷ் சிவன்
Advertisement
Next Article