முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’முதல்வர் எழுப்பிய 3 கேள்விகள்’..!! ’பதில் சொல்லுங்க மோடி’..!! வைரலாகும் எக்ஸ் தள பதிவு..!!

11:34 AM Apr 01, 2024 IST | Chella
Advertisement

பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 கேள்விகளை எழுப்பி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பது வைரலாகி வருகிறது.

Advertisement

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருப்பது... பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்து விட்டு, தேர்தலுக்காக திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழக மக்கள் கேட்கும் கேள்வி மூன்று தான்.

கேள்வி 1 : தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், மத்திய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?

கேள்வி 2 : இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்ட போதும், தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?

கேள்வி 3 : 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா?

திசை திருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர். பதில் சொல்லுங்க பிரதமர் மோடி” என்று முதல்வர் முக.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Read More : Gold Rate | வரலாறு காணாத உச்சம்..!! ஒரே நாளில் எகிறிய தங்கம் விலை..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Advertisement
Next Article