குடிபோதையில் 13 வயது சிறுமியை மாறி மாறி பலாத்காரம் செய்த 3 பேர்..!! மகளை நேரில் பார்த்து மனமுடைந்த தந்தை..!!
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த மாட்டு வியாபாரியின் 13 வயது மகள், அங்குள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி சம்பவத்தன்று மலம் கழிக்க தனது வீட்டின் அருகில் உள்ள புதர் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கும் வீரப்பன் (28), இளமாதன் (28), சின்னராசு (30) ஆகிய மூவரும் மது அருந்தி கொண்டிருந்துள்ளனர்.
அந்த சிறுமியை இந்த மூவரும் நோட்டமிட்ட நிலையில், இவர்களுக்கு விபரீத ஆசை வந்துள்ளது. போதையில் இருந்த மூவரும், சிறுமியின் வாயை பொத்தி சிறிது தூரம் தூக்கிச் சென்றனர். பின்னர், 3 பேரும் மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர். இதற்கிடையே, வெளியே சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால், அவரை தேடி பெற்றோர் சென்றுள்ளனர்.
சிறிது தூரத்தில் மகளின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அங்கு ஓடிச் சென்று பார்த்தபோது, சிறுமி அலங்கோலமான நிலையில் கிடந்துள்ளார். பலாத்காரம் செய்த வீரப்பன், இளமாதன், சின்னராசு ஆகியோர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதையடுத்து, அங்கு நடந்த சம்பவம் வெளியே தெரிந்தால் அவமானமாகி விடும் என்று எண்ணி மகளை உடனடியாக உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு மகளின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், மனம் உடைந்த சிறுமியின் தந்தை பள்ளிகொண்டா போலீசில் புகார் அளிக்க சென்றார். எல்லைப் பிரச்னை காரணமாக அவரது புகாரை பெறாமல் பள்ளிகொண்டா, வேப்பங்குப்பம் போலீஸார் அலைக்கழித்துள்ளனர். இதற்கிடையே, அந்த மூவரும் தலைமறைவாகினர்.
இந்நிலையில், நேற்று வேலூர் அனைத்து மகளிர் போலீசில் சிறுமி அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் காஞ்சனா விசாரணை நடத்தி வீரப்பன், மதன், சின்னராசு ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர், ரகசிய இடத்தில் வைத்து, தொடர்ந்து விசாரணை நடத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.
Read More : காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கி ரசித்த காதலன்..!! பல மாதங்களாக மிரட்டி கூட்டு பலாத்காரம்..!!