முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஓபிஎஸ் அணிக்கு 3 மக்களவை தொகுதிகள், ஒரு மாநிலங்களவை பதவி..!! பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டி..?

05:35 PM Feb 06, 2024 IST | 1newsnationuser6
Advertisement

பாஜக கூட்டணியில் போட்டியிடும் ஓபிஎஸ் அணிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் அதுமட்டுமின்றி ஒரு ராஜ்யசபா தொகுதியும் தருவதாக பாஜக வாக்குறுதி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் அணி இணைந்து போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. என்னதான் அவர் நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவேன் என்று கூறினாலும், அவருக்கு தாமரை சின்னத்தில் போட்டியிட 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தேனி, மதுரை மற்றும் தஞ்சாவூர் ஆகிய தொகுதிகள் ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி ஓபிஎஸ் மகனுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்படும் என்றும் ஒருவேளை நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து விட்டாலும், தனது மகன் நாடாளுமன்றத்திற்கு செல்வது உறுதி என்றும் ஓபிஎஸ் தனது தரப்பிடம் கூறி வருவதாக தெரிகிறது. இந்நிலையில், இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதாகவும் எப்படியாவது அந்த சின்னத்தை பெற்று விட வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு உறுதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

Tags :
அதிமுகஓபிஎஸ் கூட்டணிநாடாளுமன்ற தேர்தல் கூட்டணிபாஜக
Advertisement
Next Article