முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நாட்டையே உலுக்கிய கவுரவக் கொலை.! "1 வயசு குழந்தையை கூட விட்டு வைக்கலையே.." துடிதுடிக்க பலியான 3 உயிர்கள்.!

12:51 PM Jan 12, 2024 IST | 1newsnationuser7
Advertisement

பீகார் மாநிலத்தில் காதல் திருமணம் செய்த கணவன் மனைவி மற்றும் அவர்களது 1 வயது மகள் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் பெண்ணின் தந்தை மற்றும் சகோதரனை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Advertisement

பீகார் மாநிலம் நவாச்சியா மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தினி குமாரி மற்றும் சந்தன் குமார் ஆகியோர் சிறு வயது முதலே காதலித்து வந்தனர். இதற்கு சாந்தினி குமாரியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் 2021 ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு 1 வயதில் பெண் குழந்தை ஒன்று இருந்தது.

இந்நிலையில் தங்களது சொந்த கிராமத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் புதிய வீட்டிற்கு காதல் ஜோடி தங்களது குழந்தையுடன் சென்றிருக்கிறது. அப்போது கோபால்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நவ்டாலியா பகுதியில் சாந்தினி குமாரியின் தந்தை பப்பு சிங் மற்றும் அவரது சகோதரர் தல்ஜீத் குமார் ஆகியோர் காதல் ஜோடியை வழிமறித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காதல் ஜோடியை இரும்பு ராடால் தாக்கிய அவர்கள் சாந்தினி குமாரி அவரது கணவர் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளனர். மேலும் அவர்களது 1 வயது மகளையும் கொடூரமாக சுட்டு படுகொலை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக தப்பி ஓடிய பெண்ணின் தந்தை பப்பு சிங் மற்றும் சகோதரர் தல்ஜீத் குமார் ஆகியோரை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. இது தொடர்பாக காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் இருவரும் ஒரே ஜாதியை சேர்த்தவர்கள் என்றாலும் சமூக அந்தஸ்து காரணமாக இந்த ஜோடி கௌரவ கொலை செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையை தெரிவித்திருந்தது.

Tags :
Biharcrimehonour killingindiamurder
Advertisement
Next Article