For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

3 மணி நேர விசாரணை!. வினேஷ் போகத் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு 3வது முறையாக ஒத்திவைப்பு!

3 hour trial!. Verdict on Vinesh Bhogat's appeal adjourned for the 3rd time!
05:40 AM Aug 14, 2024 IST | Kokila
3 மணி நேர விசாரணை   வினேஷ் போகத் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு 3வது முறையாக ஒத்திவைப்பு
Advertisement

Vinesh Phogat: பாரீஸ் ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டிக்கு தேர்வானநிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வினேஷ் போகத் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு 3 வது முறையாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement

சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான 33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தார். இத்தகைய சூழலில் தான் வினேஷ் போகத் அதிக எடை காரணமாகப் பெண்களுக்கான 50 கிலோ மல்யுத்தப் போட்டியில் இருந்து கடந்த 7 ஆம் தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இது இந்தியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், கடும் மன உளைச்சலுக்கு ஆளான வினேஷ் போகத் இனி என்னிடம் போராடச் சக்தியில்லை என்று மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும், தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தில் முறையிட்ட வினேஷ் போகத், இறுதிப்போட்டிக்கு முன்பு வரை தனது எடை சரியாக இருந்ததால் வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

வினேஷ் போகத் தகுதிநீக்கத்தை எதிர்த்து இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, விளையாட்டு போட்டிகளுக்கான சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது. 3 மணி நேரத்துக்கும் மேலாக மத்தியஸ்தர் அனபெல் பென்னெட் நடத்திய விசாரணை நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. நேற்று இரவு 9.30க்கு தீர்ப்பு வெளியாக இருந்த நிலையில், ஆக.16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Readmore: இதை விடவா வேறு கொசு விரட்டிகள் வேண்டும்..? வீட்டிலுள்ள பொருட்களே போதும்..!!

Tags :
Advertisement