முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அடி தூள்...! அக்.31 முதல் பெண்களுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள்...!

3 free gas cylinders for women from Oct 31
06:30 AM Oct 24, 2024 IST | Vignesh
Advertisement

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கும் திட்டம் வரும் அக்டோபர் 31-ம் தேதி தீபாவளி பண்டிகை முதல் அமல்படுத்த ஆந்திர அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் மாநில அமைச்சரவை கூட்டம் அமராவதியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் நாதள்ள மனோகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கும் திட்டம் வரும் அக்டோபர் 31-ம் தேதி தீபாவளி பண்டிகை முதல் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு தீபாவளி பரிசாக இத்திட்டம் தொடங்கப்படுகிறது. இதன்படி 4 மாதங்களுக்கு ஒருமுறை பயனாளிகளுக்கு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். தொகையை செலுத்தி சிலிண்டர் பெற்றுக்கொண்ட 48 மணி நேரத்திற்குள் அந்த தொகை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதனால் ஆந்திர அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.2,700 கோடி செலவாகும்.

மத்திய அரசு கேஸ் மானியம்

உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத் தொகை கடந்த மாதம் உயர்த்தப்பட்டது (gas cylinder subsidy increased). அதிகாரப்பூர்வ தகவலின் படி, மார்ச் 2024 வரை மட்டுமே மானிய தொகை கிடைக்கும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது மார்ச் 2025 வரை இதன் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு குடும்ப வருமானம் 10 லட்சத்திற்கு கீழ் உள்ளவர்கள் இந்த தொகை பெற தகுதியானவர்கள். உங்கள் வங்கி கணக்கில் பணம் வந்ததா என்பதை அறிய http://mylpg.in/ என்ற இணையதளத்தில் உங்களுக்கு கொடுக்கப்பட்ட LPG ஐடியை பதிவிட்டு, சரிபார்க்கலாம்..

Tags :
andhra pradeshchandra babu naiduDiwalifree gasGas Cylinder
Advertisement
Next Article