முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

திடீரென வெடித்த 2ஆம் உலகப் போர் குண்டு..!! விமான நிலையத்தில் பரபரப்பு..!! இது வெறும் சாம்பிள் தானாம்..!!

In Japan, an unexploded World War 2 American bomb that had been buried at Miyazaki Airport caused a stir.
09:04 AM Oct 03, 2024 IST | Chella
Advertisement

ஜப்பானில், மியாசாகி விமான நிலையத்தில் புதைக்கப்பட்டிருந்த 2ஆம் உலகப் போரின் போது வெடிக்காத அமெரிக்க வெடிகுண்டு திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில், தென் மேற்கு பகுதியில் மியாசாகி விமான நிலையம் உள்ளது. 1943இல், 2ஆம் உலகப் போரின் போது, ஜப்பான் கடற்படை தளமாக இந்த விமான நிலையம் திறக்கப்பட்டது. அப்போது, வீசப்பட்ட நுாற்றுக்கணக்கான டன் வெடிகுண்டுகள், ஜப்பானை சுற்றி புதைந்து கிடப்படாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சில சமயங்களில், கட்டுமானப் பணிகளின் போது வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்படுகின்றன. அமெரிக்க ராணுவம் வீசிய வெடிக்காத குண்டுகள், மியாசாகி விமான நிலையம் அமைந்துள்ள பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில், மியாசாகி விமான நிலையத்தில் 2ஆம் உலகப் போரின் போது வெடிக்காத அமெரிக்க வெடிகுண்டு திடீரென வெடித்துள்ளது.

இதனால், ஓடுபாதையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ”500 பவுண்டுகள் எடையுள்ள அமெரிக்க வெடிகுண்டு திடீரென வெடித்தது. இதனால், ஓடுபாதையில் பள்ளம் ஏற்பட்டது. வெடிகுண்டு வெடித்தபோது, அதன் அருகில் விமானங்கள் எதுவும் இல்லாததால், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால், 80-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக” தெரிவித்தனர்.

Read More : ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம குட் நியூஸ்..!! ரூ.20,000 வரை பணம்..!! தமிழ்நாடு அரசு அட்டகாசமான அறிவிப்பு..!!

Tags :
2ஆம் உலகப்போர்அமெரிக்காவெடிகுண்டுஜப்பான்
Advertisement
Next Article