"என்ன ஏமாத்திட்டு இன்னொருத்தன் கூட போறியா?" ஆத்திரமடைந்த முதல் காதலன்; கோவத்தில் 2 வது காதலன் செய்த காரியம்..
சத்தீஸ்கர் மாநிலம், துர்க் பகுதியில் வசித்து வருபவர் சேத்தன். இவர் வசித்து வரும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளனர். இருவரின் தாயாரும் காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர். இளம்பெண்ணின் தாயாருக்கு, பணி மாற்றம் கிடைத்ததால் அவர் தனது தாயுடன் துர்க் என்னும் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அவருக்கு அறிமுகமான லுகேஷ் சாஹு என்பவரை காதலித்துள்ளார். இதனால் அவர் சேத்தன் அழைப்பை எடுக்க மறுத்துவிட்டார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, இளம் பெண் தனது தாயுடன் துர்க் பகுதிக்கு சென்றுள்ளார்.
இதனை அறிந்த சேத்தன், தன்னை சந்திக்குமாறு இளம்பெண்ணை வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்க்கு இளம் பெண் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சேத்தன், இளம்பெண்ணை துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த இளம்பெண், இது குறித்து லுகேஷிடம் கூறியுள்ளார். இதையடுத்து, லுகேஷ், தனது காதலியிடம் சேத்தனை சந்திக்குமாறு கூறியுள்ளார். லுகேஷின் அறிவுறுத்தலின் பேரில், அந்த பெண் தனது வீட்டருகே ஒரு இடத்திற்கு சேத்தனை வரவழைத்துள்ளார். அப்போது லுகேஷ் தனது நண்பர்களுடன் அங்கு சென்றுள்ளார்.
அங்கு இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், லுகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சேத்தனை கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சேத்தன், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read more: நெஞ்சை ரணமாக்கும் கொடூர சம்பவம்.. பள்ளி வாசலில் நின்ற சிறுமிக்கு நேர்ந்த சோகம்..