2வது டெங்கு தடுப்பூசி!… TAK-003-க்கு உலக சுகாதார அமைப்பு முன்ஒப்புதல்!
2nd Dengue Vaccine: டெங்கு காய்ச்சலுக்கான 2வது தடுப்பூசியாக அறிவிக்கப்பட்ட TAK-003-க்கு உலக சுகாதார அமைப்பு முன் ஒப்புதல் வழங்கியுள்ளது.
உலக சுகாதார அமைப்பு (WHO) டெங்கு காய்ச்சலுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. அதாவது, டெங்கு காய்ச்சலுக்கு எதிரான TAK-003 என்ற புதிய தடுப்பூசியை கடந்த 10ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தடுப்பூசிய டகேடா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த வகை தடுப்பூசி, live-attenuated வகையை சேர்ந்தது. அதாவது, டெங்குவை ஏற்படுத்தும் வைரஸின் நான்கு வகை பலவீனமான நுண்ணுயிரிகளை கொண்டு TAK-003 தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது.
ன்ஒப்புதல் என்றால் தடுப்பூசியின் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவை ஆய்வு செய்யப்படும். சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப தடுப்பூசி தயாரிக்கப்பட்டதா? சர்வதேச அளவில் குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் இதை பயன்படுத்தலாமா என்பது உறுதி செய்யப்படும்.
முன்ஒப்புதல் அளிக்கப்பட்டதால் ஐக்கிய நாடுகளின் அமைப்புகள் மற்றும் பிற உலகளாவிய சுகாதார அமைப்புகளின் கொள்முதல்களில் இந்த தடுப்பூசி சேர்க்கப்படும். பரவலாக விநியோகம் செய்யவும் பொது சுகாதாரத் திட்டங்களிலும் இது பயன்படுத்தப்படும்.
உலக சுகாதார அமைப்பின் ஒழுங்குமுறை மற்றும் முன்ஒப்புதல் பிரிவு இயக்குநரும் மருத்துவருமான ரோஜெரியோ காஸ்பர், இதுகுறித்து கூறுகையில், "இரண்டு டெங்கு தடுப்பூசிகளுக்கு மட்டுமே இன்றுவரை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் தேவைப்படும் அனைத்து சமூகங்களுக்கும் தடுப்பூசிகள் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், மேலும் பல தடுப்பூசி உருவாக்குநர்கள் மதிப்பீட்டிற்கு முன்வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.
Readmore: CSK-க்கு பேரிடி!… நாளைய போட்டியில் இருந்து முக்கிய வீரர் விலகல்!… நாடு திரும்புவதால் சிக்கல்!