முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

2,877 காலியிடங்கள்..!! தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் கொட்டிக் கிடக்கும் வேலை..!!

The notification for filling 2,877 vacant posts in Tamil Nadu Government Transport Corporations has been released now.
02:47 PM Oct 30, 2024 IST | Chella
Advertisement

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களில் காலியாகவுள்ள 2,877 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

Advertisement

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 8 போக்குவரத்துக் கழகங்கள் மூலமாகத் தினசரி ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நகர், புறநகர் என அனைத்துப் பகுதிகளுக்கும் பேருந்து சேவை இருப்பதால் மக்கள் தினசரி போக்குவரத்துக் கழக பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, போக்குவரத்துக் கழகங்களில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததன் காரணமாக சேவையை வழங்குவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களில் காலியாகவுள்ள 2,877 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இதில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிகளை இணைந்து மேற்கொள்ளும் டிசிசி பணியில் 2,340 காலியிடங்களும், 537 தொழில்நுட்பப் பணியாளர்களுக்கான காலிப்பணியிடங்களும் நிரப்பப்படவுள்ளது. இதில், 307 டிசிசி மற்றும் 462 தொழில்நுட்பப் பணியாளர்கள் என மொத்தம் 769 காலிப்பணியிடங்கள் எஸ்சி/எஸ்டி பிரிவினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 2,108 பணியிடங்கள் மற்ற பிரிவினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Read More : ஆண்மையை அதிகரிக்கும் காய்கறி..!! இளைஞர்களே இதை உணவில் அதிகம் சேர்த்துக்கோங்க..!! அந்த பிரச்சனையே வராது..!!

Tags :
காலிப்பணியிடங்கள்தமிழ்நாடு அரசுதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்
Advertisement
Next Article