For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

24 மணிநேரத்தில் 280 வீரர்கள் பலி!. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு!

08:51 AM Dec 06, 2024 IST | Kokila
24 மணிநேரத்தில் 280 வீரர்கள் பலி   ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு
Advertisement

Russia: உக்ரைனின் குர்ஸ்க் பகுதியில் ஆயுத படையை சேர்ந்த 280 பேர் 24 மணிநேரத்தில் உயிரிழந்து உள்ளனர் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர், கடந்த 2 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. உக்ரைனின் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷ்யா துவக்கத்தில் கைப்பற்றிய போதிலும், அவற்றை பதிலடி கொடுத்து ரஷ்யாவிடம் இருந்து பின்னர் உக்ரைன் மீட்டது. உக்ரைன் ரஷ்யாவுக்கும் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தூதரக மற்றும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் அதில் பலன் ஏற்படவில்லை.

இந்நிலையில் உக்ரைன் குர்ஸ்க் பகுதியில் 37,935 வீரர்கள் மற்றும் 229 பீரங்கிகளை இழந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த போரில் அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை உக்ரைன் அரசு கோரியுள்ள நிலையில், அந்நாடுகளும் உக்ரைனுக்கு ராணுவம் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. இதே போன்று வடகொரியாவும் ரஷ்யாவுக்கு ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியொன்றில், உக்ரைனின் குர்ஸ்க் பகுதியில் ஆயுத படையை சேர்ந்த 280 பேர் 24 மணிநேரத்தில் உயிரிழந்து உள்ளனர். பீரங்கி ஒன்று, பீரங்கிகளை அழிக்கும் வாகனங்கள், 3 கார்கள், மின்னணு போர் நிலையம் மற்றும் 2 பீரங்கி ஏவுகணைகள் தாக்கி அழிக்கப்பட்டு உள்ளன என தெரிவித்துள்ளது.

Readmore: அதிகாலையிலேயே அதிர்ச்சி!. தலைநகரில் பயங்கர தீவிபத்து!. வீடுகள் தீயில் எரிந்து சேதம்!. ஏராளமான கால்நடைகள் பலியான சோகம்!

Tags :
Advertisement