For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் 28 லட்சம் இணைப்புகளுக்கு மீட்டரே இல்லை..!! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மத்திய அரசு..!!

The Central Electricity Department has released information that meters have been installed on 3.04 crore electricity connections in Tamil Nadu.
07:57 AM Sep 19, 2024 IST | Chella
தமிழ்நாட்டில் 28 லட்சம் இணைப்புகளுக்கு மீட்டரே இல்லை     அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மத்திய அரசு
Advertisement

தமிழ்நாட்டில் 3.04 கோடி மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தப்பட்டுள்ளதாக மத்திய மின்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

Advertisement

அதன்படி, வீடு, தொழிற்சாலை உள்ளிட்ட 3.32 கோடி மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளதாகவும், 28 லட்சம் இணைப்புகளில் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, மீட்டர்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 23.43 லட்சம் விவசாய இணைப்புகளில், 4.26 லட்சத்துக்கு மட்டுமே மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த மார்ச் 31 நிலவரப்படி, மாநிலம் வாரியாக உள்ள மின் இணைப்புகள், அவற்றில் மீட்டர் பொருத்தப்பட்டவற்றின் எண்ணிக்கை விவரங்களை மத்திய மின்துறை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் 3.32 கோடி இணைப்புகளில், 91.54 சதவீதம் அதாவது, 3.04 கோடி இணைப்புகளில் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. வீடுகளில் 96.38 சதவீத இணைப்புகளிலும், விவசாயப் பிரிவில் 18.20 சதவீத இணைப்புகளிலும் மீட்டர்கள் உள்ளன.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஒவ்வொரு இணைப்பிலும் மின் பயன்பாடு விபரம் தெரிந்தால்தான், கட்டணம் வசூலாகிறதா? என்பது தெரியவரும். 'ஓவர்லோடு' ஏற்படும் இடங்களைக் கண்டறிந்து, சரிசெய்ய முடியும். இலவச மின்சாரம் வழங்கப்படும் விவசாயப் பிரிவிலும், மீட்டர் பொருத்தப்படுகிறது. மீட்டர் பொருத்தினாலும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும்” என்றார்.

Read More : பயணிகளுக்கு செம குட் நியூஸ்..!! தமிழ்நாடு அரசு எடுத்த சூப்பர் முடிவு..!! இனி அந்த பிரச்சனையே இருக்காதாம்..!!

Tags :
Advertisement